தமிழக அரசுக்கு ரூ.5 லட்சம் அபராதம்: சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு

Updated : செப் 29, 2022 | Added : செப் 29, 2022 | கருத்துகள் (25) | |
Advertisement
புதுடில்லி :தேவையில்லாத மேல்முறையீட்டு வழக்கை தாக்கல் செய்ததற்காக தமிழக அரசுக்கு, உச்ச நீதிமன்றம் 5 லட்சம் ரூபாய் அபராதம் விதித்தது.தமிழக அரசு ஊழியர்கள் சிலருக்கு ஓய்வூதியம் வழங்குவது தொடர்பான வழக்கில், சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்தது. இந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை, உச்ச நீதிமன்ற
TamilNadu,Suprem Court, SC,தமிழக அரசு, ரூ5 லட்சம், அபராதம், சுப்ரீம் கோர்ட்

புதுடில்லி :தேவையில்லாத மேல்முறையீட்டு வழக்கை தாக்கல் செய்ததற்காக தமிழக அரசுக்கு, உச்ச நீதிமன்றம் 5 லட்சம் ரூபாய் அபராதம் விதித்தது.

தமிழக அரசு ஊழியர்கள் சிலருக்கு ஓய்வூதியம் வழங்குவது தொடர்பான வழக்கில், சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்தது.



இந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எம்.ஆர்.ஷா, கிருஷ்ண முராரி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:



latest tamil news


ஏற்கனவே முடித்து வைக்கப்பட்ட விவகாரத்தில், இத்தகைய மனுவை தமிழக அரசு தாக்கல் செய்திருக்கக் கூடாது. ஓய்வூதியம் தொடர்பான பிரச்னையில் நீதிமன்றம் வரை விவகாரம் வந்து அது தீர்த்து வைக்கப்பட்ட பிறகும், மீண்டும் சம்பந்தப்பட்ட மனுதாரர் ஓய்வூதியத்திற்கு தகுதியற்றவர் என அரசு வாதிடுகிறது.



இது ஏற்றுக்கொள்ளக் கூடியது அல்ல. இது போன்ற தேவையற்ற மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்படுவதை தவிர்க்க வேண்டும். எனவே, இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. மனுவை தாக்கல் செய்த தமிழக அரசுக்கு, 5 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது. இந்த தொகையை நான்கு வாரத்தில் உச்ச நீதிமன்ற பதிவாளர் அலுவலகத்தில் செலுத்த வேண்டும்.

இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (25)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sankaranarayanan - Chennai-Tamilnadu,இந்தியா
29-செப்-202213:47:08 IST Report Abuse
sankaranarayanan இதுபோன்று இன்னும் பல மனுக்கள் விரைவில் வரவிருக்கின்றன. பிறகு மொத்தமாக ஒரு தொகையை உச்சநீதிமன்றம் சொன்னால் சவுரியமாக இருக்கும்.
Rate this:
Cancel
அசோக்ராஜ் - சேலம் ,இந்தியா
29-செப்-202213:26:17 IST Report Abuse
அசோக்ராஜ் அஞ்சு என்ன? அம்பது லச்சம் போடுங்க எசமான். மக்கள் வரிப்பணம் தானே? மாடு மாதிரி ஒளைச்சு வரி கட்டுவானுங்க மாக்கானுங்க.
Rate this:
Cancel
Anand - chennai,இந்தியா
29-செப்-202212:30:41 IST Report Abuse
Anand தலைவன் தான் ஒரு தினுசு என்றால் ஆலோசகர்களும் அதைவிட தத்தியாக இருப்பார்கள் போலிருக்கு...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X