புதுடில்லி, :'என்.ஓ.சி., எனப்படும் காவல் துறையின் தடையில்லா சான்றிதழ் பெற இனி, தபால் அலுவலகங்களில் இயங்கும் பாஸ்போர்ட் சேவா மையங்களிலேயே விண்ணப்பிக்கலாம்' என வெளியுறவு அமைச்சகம் அறிவித்துள்ளது.
வெளியுறவு அமைச்சகத்தின் அறிவிப்பு:வேலை, கல்வி மற்றும் சுற்றுலா ஆகியவற்றுக்காக வெளிநாடு செல்வோர் பாஸ்போர்ட் பெற, காவல் துறையின் தடையில்லா சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். இதற்கு முன், பாஸ்போர்ட் மையம், வெளிநாடுகளில் வசிப்போர் துாதரகம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டியிருந்தது.
ஆனால், நேற்று முதல், நாடு முழுதும் 428 தபால் அலுவலகங்களில் அமைக்கப்பட்டுள்ள பாஸ்போர்ட் சேவா மையங்களிலேயே, 'ஆன்லைன்' வாயிலாக காவல் துறையின் தடையில்லா சான்றுக்கும் விண்ணப்பிக்கலாம். இதனால், பாஸ்போர்ட் மிக விரைவில் கிடைக்க வாய்ப்பு ஏற்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.