பிரபல நடிகைகள் மீது பாலியல் சீண்டல்: சினிமா விளம்பர நிகழ்வில் அத்துமீறல்

Updated : செப் 29, 2022 | Added : செப் 29, 2022 | கருத்துகள் (33) | |
Advertisement
கோழிக்கோடு, :கேரளாவில், 'ஷாப்பிங் மாலில்' நடந்த திரைப்பட விளம்பர நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த இரண்டு நடிகைகள், கூட்டத்தில் பாலியல் சீண்டல்களுக்கு ஆளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.கேரளாவின் கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள பிரபல ஷாப்பிங் மாலில், விரைவில் வெளியாக இருக்கும் மலையாள திரைப்படத்தின் விளம்பர நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடந்தது. இதில் பங்கேற்க,
 நடிகைகள் ,பாலியல் சீண்டல்   சினிமா விளம்பரம்,அத்துமீறல்

கோழிக்கோடு, :கேரளாவில், 'ஷாப்பிங் மாலில்' நடந்த திரைப்பட விளம்பர நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த இரண்டு நடிகைகள், கூட்டத்தில் பாலியல் சீண்டல்களுக்கு ஆளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.கேரளாவின் கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள பிரபல ஷாப்பிங் மாலில், விரைவில் வெளியாக இருக்கும் மலையாள திரைப்படத்தின் விளம்பர நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடந்தது.



இதில் பங்கேற்க, அந்த திரைப்படத்தில் நடித்த இரண்டு பிரபல இளம் நடிகைகள் வந்திருந்தனர். அவர்களை பார்ப்பதற்காக ஏராளமான ரசிகர்கள் திரண்டனர்.நிகழ்ச்சி முடிந்து அந்த இரு நடிகைகளும் புறப்படுகையில், நுாற்றுக்கணக்கான ரசிகர்கள் அவர்களை சூழ்ந்துகொண்டனர். பாதுகாவலர்களால் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு கூட்டம் திரண்டது. அப்போது அந்த இரண்டு நடிகைகளையும் தகாத இடத்தில் தொட்டு கூட்டத்தினர் துன்புறுத்தியதாக செய்தி வெளியாகி உள்ளது.இது குறித்து பாதிக்கப்பட்ட நடிகை வெளியிட்ட சமூக ஊடக பதிவு:எனக்கு கோழிக்கோடு மிகவும் பிடித்த இடம். அங்கு நடந்த நிகழ்ச்சியில் இருந்து புறப்பட்ட போது, என்னை சூழ்ந்த கூட்டத்தினர் மிக மோசமாக நடந்து கொண்டனர்.


latest tamil news


என் உடலின் அந்தரங்கமான இடங்களில் கைவைத்து அழுத்தினர். நான் ஸ்தம்பித்து போனேன். உடனடியாக அந்த இடத்திலேயே என் கோபத்தை வெளிப்படுத்தினேன். என்னுடன் வந்த மற்றொரு நடிகைக்கும் இதே நிலை ஏற்பட்டது. அவர் அதிர்ச்சியில் அதை வெளிப்படுத்தக் கூட முடியாமல் உறைந்து போனார். நம்மை சுற்றியுள்ள மக்கள் பாலியல் ரீதியாக மிகப் பெரிய பாதிப்பில் இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. எத்தனையோ இடங்களில் விளம்பர நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளோம். இப்படிப்பட்ட மோசமான அனுபவத்தை சந்தித்ததில்லை.இவ்வாறு அவர் கூறினார்.பாலியல் சீண்டலுக்கு ஆளான மற்றொரு நடிகையும், தன் மோசமான அனுபவத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். இந்த விவகாரம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (33)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vijay D Ratnam - Chennai,இந்தியா
29-செப்-202223:08:10 IST Report Abuse
Vijay D Ratnam அது ஒண்ணுமில்ல சீப்பா கிடைக்குதுன்னு மத்திமீன், மாட்டுக்கறி, வாத்துக்கறி, வாத்து முட்டைன்னு அதிகமா அடிச்சி உடுறதுனால மலையாளிங்க கொஞ்சம் அப்டித்தான் இருப்பாய்ங்கக்கா.
Rate this:
Cancel
29-செப்-202222:29:01 IST Report Abuse
Sathyanarayanan Sathyasekaren 0
Rate this:
Cancel
29-செப்-202216:06:03 IST Report Abuse
ஆரூர் ரங் கம்யூனிஸ்டு நிறைந்த மாநிலத்தில் வேறு எதையும்🤔 எதிர்பார்க்கவே முடியாது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X