மீண்டும் மீண்டும் ஏவுகணை சோதனை : வடகொரியா அடாவடி

Updated : செப் 29, 2022 | Added : செப் 29, 2022 | கருத்துகள் (2) | |
Advertisement
சியோல் : தொடர்ச்சியாக ஏவுகணை சோதனைகளை நடத்தி வரும் வட கொரியா, நேற்று அடுத்தடுத்து இரண்டு ஏவுகணை சோதனை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. கிழக்கு ஆசியா நாடான வட கொரியா இந்தாண்டு துவக்கத்தில் கண்டம் விட்டு கண்டம் சென்று தாக்கும் ஏவுகணை, ஒலியை விட ஐந்து மடங்கு வேகத்தில் செல்லும் 'ஹைபர்சோனிக்' ஏவுகணை ஆகியவற்றின் சோதனைகளை நடத்தியது. கடந்த ஆகஸ்ட் மாதம் வட
North Korea test-fires two ballistic missiles day before US vice-president's visit to Seoul

சியோல் : தொடர்ச்சியாக ஏவுகணை சோதனைகளை நடத்தி வரும் வட கொரியா, நேற்று அடுத்தடுத்து இரண்டு ஏவுகணை சோதனை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.


கிழக்கு ஆசியா நாடான வட கொரியா இந்தாண்டு துவக்கத்தில் கண்டம் விட்டு கண்டம் சென்று தாக்கும் ஏவுகணை, ஒலியை விட ஐந்து மடங்கு வேகத்தில் செல்லும் 'ஹைபர்சோனிக்' ஏவுகணை ஆகியவற்றின் சோதனைகளை நடத்தியது.


latest tamil newsகடந்த ஆகஸ்ட் மாதம் வட கொரியாவின் மேற்கு கடற்கரை பகுதியான ஆங்சோன் என்ற பகுதியில் இருந்து இரு ஏவுகணைகளை ஏவி சோதனை நடத்தியதாக, தென்கொரியா ராணுவம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் வடகொரியாவின் பையோங்க் நகரில் சனான் என்ற இடத்தில் குறுகிய தூரம் சென்று இலக்கை தாக்கும் இரு ஏவுகணைகளை வட கொரியா ஏவி பரிசோதனை நடத்தியதாக தென்கொரியா தெரிவித்துள்ளது.தென்கொரியாவிற்கு அரசு முறைப்பயணமாக அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் வருகை தர உள்ளார். இந்த சூழ்நிலையில் அமெரிக்காவை அச்சுறுத்தும் விதமாக இரு ஏவுகணைகளை வடகொரியா சோதித்ததாக கூறப்படுகிறது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தியாகு - கன்னியாகுமரி ,இந்தியா
29-செப்-202207:49:13 IST Report Abuse
தியாகு வட கொரியாவில் இருந்து ஏவப்படும் ஏவுகணையில் இருந்து பூமியில் ஊழல்கள் மூலம் அதிகம் சொத்து சேர்த்தவரின் வீட்டை புகைப்படம் எடுத்தால் அதில் சென்னை கோபாலபுரத்தில் வாழ்ந்து மறைந்த ஒருவரின் வீட்டின் மாடி தெரியும்.
Rate this:
Cancel
NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா
29-செப்-202204:25:06 IST Report Abuse
NicoleThomson பாகிஸ்தானிற்கு புது ஏவுகணை கிடைத்துவிட்டது , நல்ல டுபாகூர் பேரா இருந்தா சொல்லுங்கப்பா ,
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X