சண்டிகர் விமான நிலையத்திற்கு மாவீரன் பகத் சிங் பெயர் சூட்டப்பட்டது

Updated : செப் 29, 2022 | Added : செப் 29, 2022 | கருத்துகள் (4) | |
Advertisement
சண்டிகர் :பஞ்சாபில் உள்ள சண்டிகர் சர்வதேச விமான நிலையத்துக்கு, ஷாஹீத் பகத் சிங் சர்வதேச விமான நிலையம் என நேற்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.பஞ்சாப் மற்றும் ஹரியானா ஆகிய மாநிலங்களுக்கு பொதுவான தலைநகரமாக சண்டிகர் உள்ளது. பஞ்சாபில் முதல்வர் பகவந்த் மான் தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சியும், ஹரியானாவில் முதல்வர் மனோகர் லால் கட்டார் தலைமையில் பா.ஜ., கூட்டணி ஆட்சியும்
Bhagat Singh, Airport, Chandigarh,பகத் சிங், விமான நிலையம், சண்டிகர், Maveeran Bhagat Singh, மாவீரன் பகத் சிங்,

சண்டிகர் :பஞ்சாபில் உள்ள சண்டிகர் சர்வதேச விமான நிலையத்துக்கு, ஷாஹீத் பகத் சிங் சர்வதேச விமான நிலையம் என நேற்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.



பஞ்சாப் மற்றும் ஹரியானா ஆகிய மாநிலங்களுக்கு பொதுவான தலைநகரமாக சண்டிகர் உள்ளது. பஞ்சாபில் முதல்வர் பகவந்த் மான் தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சியும், ஹரியானாவில் முதல்வர் மனோகர் லால் கட்டார் தலைமையில் பா.ஜ., கூட்டணி ஆட்சியும் நடக்கின்றன.



இங்கு, தலைநகர் சண்டிகர் சர்வதேச விமான நிலையத்திற்கு சுதந்திர போராட்ட வீரர் பகத் சிங் பெயரை வைக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாகவே உள்ளது.ஆனால், பஞ்சாப் - ஹரியானா அரசுகளுக்கு இடையே ஒருமித்த கருத்து ஏற்படாததை அடுத்து, இந்த பெயர் மாற்றம் சாத்தியப்படாமல் இருந்தது.



இந்நிலையில், பெயர் மாற்றத்துக்கான முயற்சியில் மத்திய விமான போக்குவரத்துத்துறை அமைச்சகம் தீவிரமாக ஈடுபட்டது. பஞ்சாப் - ஹரியானா முதல்வர்கள் சந்தித்து பேசி இணக்கமான முடிவு எடுக்கப்பட்டது. இதையடுத்து, சண்டிகர் விமான நிலையம், ஷாஹீத் பகத் சிங் சர்வதேச விமான நிலையம் என பெயர் மாற்றப்பட உள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் அறிவித்தார்.



பகத் சிங்கின் 115வது பிறந்த நாளான நேற்று விமான நிலையத்தின் பெயர் மாற்றப்பட்டது.இது தொடர்பாக விமான நிலையத்தில் நடந்த பெயர் மாற்ற விழாவுக்கு, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமை வகித்தார். பஞ்சாப் கவர்னர் பன்வாரிலால் புரோஹித், ஹரியானா கவர்னர் பண்டாரு தத்தாத்ரேயா, பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், ஹரியானா துணை முதல்வரும், ஜனநாயக ஜனதா கட்சித் தலைவருமான துஷ்யந்த் சவுதாலா உள்ளிட்டோர் நிகழ்வில் பங்கேற்றனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sankar - சென்னை,இந்தியா
29-செப்-202219:38:51 IST Report Abuse
sankar பகத் சிங்கை தூக்கிலிட்டே 91 வருஷம் ஆகுதே. தேச பக்தருங்க பிஜேபீ ஆள வந்தே எட்டு வருஷமாச்சே. எலெக்ஷன் கிட்டே வர வர இந்த மாதிரி திடீர் அறிவிப்புகள் வரும். அவர் கூட தூக்கிலடப்பட்ட மத்த ரெண்டு பேருக்கு….அந்த மாதிரி கௌரவம் இல்லையா.
Rate this:
Cancel
sankar - சென்னை,இந்தியா
29-செப்-202217:45:50 IST Report Abuse
sankar லேட்.. அவரை தூக்கில போட்டு வருஷம் ஆகுதே. தேச பக்தருங்க பிஜேபீ வந்தே எட்டு வருஷமாச்சே.
Rate this:
Cancel
sankar - சென்னை,இந்தியா
29-செப்-202217:33:16 IST Report Abuse
sankar வருஷம் ஆகுதே. தேச பக்தருங்க பிஜேபீ வந்தே எட்டு வருஷமாச்சே.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X