உலகெங்கும் சட்டவிரோதமாக போலீஸ் ஸ்டேஷன் துவங்கிய சீனா

Updated : செப் 29, 2022 | Added : செப் 29, 2022 | கருத்துகள் (8) | |
Advertisement
பீஜிங் :தன் நாட்டுக்கு எதிராக செயல்படுவோரை அடையாளம் காண்பதற்காக, உலகெங்கும் சட்டவிரோதமாக போலீஸ் ஸ்டேஷன்களை சீனா துவக்கியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.உலகின் அதிகாரமிக்க நாடாக மாறுவதற்கான முயற்சியில், நம் அண்டை நாடான சீனா ஈடுபட்டு உள்ளது. அதன் ஒரு பகுதியாக, தன் நாட்டுக்கு எதிராக செயல்படுவோரைக் கண்டு பிடிப்பதற்காக, உலகெங்கும் சட்டவிரோதமாக போலீஸ்
China, Police Station, சீனா, சட்டவிரோதம், போலீஸ் ஸ்டேஷன் ,

பீஜிங் :தன் நாட்டுக்கு எதிராக செயல்படுவோரை அடையாளம் காண்பதற்காக, உலகெங்கும் சட்டவிரோதமாக போலீஸ் ஸ்டேஷன்களை சீனா துவக்கியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

உலகின் அதிகாரமிக்க நாடாக மாறுவதற்கான முயற்சியில், நம் அண்டை நாடான சீனா ஈடுபட்டு உள்ளது. அதன் ஒரு பகுதியாக, தன் நாட்டுக்கு எதிராக செயல்படுவோரைக் கண்டு பிடிப்பதற்காக, உலகெங்கும் சட்டவிரோதமாக போலீஸ் ஸ்டேஷன்களைஅந்த நாடு துவக்கி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன


latest tamil news



.கனடா, அயர்லாந்து உள்ளிட்ட வளர்ச்சியடைந்த நாடுகளிலும் இந்த சட்டவிரோத போலீஸ் ஸ்டேஷன்களை சீனா துவக்கியுள்ளது. சீனாவின் போலீஸ் துறையான, பி.எஸ்.பி., எனப்படும் பொது பாதுகாப்பு வாரியத்தின் கீழ், இந்த போலீஸ் ஸ்டேஷன்கள் செயல்படுகின்றன. இதுவரை, 21 நாடுகளில், 30 போலீஸ் ஸ்டேஷன்களை சீனா துவக்கிஉள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. சீனாவில் ஏற்கனவே மனித உரிமை மீறல் அதிகமாக உள்ளது.



இந்நிலையில், மற்ற நாடுகளில் தன் நாட்டுக்கு எதிராக செயல்படுவோரை கண்டுபிடிக்க இந்த போலீஸ் ஸ்டேஷன்களை சீனா துவக்கியுள்ளது. இதனால், மனித உரிமை மீறல் செயல்கள் அதிகரிக்கும் என, மனித உரிமை ஆர்வலர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.தொழில் பயிற்சி வகுப்புகள் என்ற பெயரில், இந்த போலீஸ் ஸ்டேஷன்கள் சட்டவிரோதமாக செயல்படுவதாகவும் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
நல்லவன் - chennai,இந்தியா
29-செப்-202213:47:16 IST Report Abuse
நல்லவன் "சட்டவிரோதமாக போலீஸ் ஸ்டேஷன்" அப்போ போலீஸ்ன்னா சட்டப்படித்தான் செய்வார்களோ... குழப்பமா இருக்கே..
Rate this:
Cancel
Raa - Chennai,இந்தியா
29-செப்-202211:05:26 IST Report Abuse
Raa கலாச்சாரம் என்ற போர்வையில் மிக அருமையாக தமிழ் பேசும் சீனா பெண்கள் தமிழகத்தில் அதிகம். தமிழ் ஆணை மணக்கும் சீனா பெண்ணும், தமிழ் பெண்ணை மணக்கும் சீனா ஆணும் - இவை எல்லாம் NIA மிகவும் கண்காணிக்க வேண்டியவை.
Rate this:
Cancel
N Annamalai - PUDUKKOTTAI,இந்தியா
29-செப்-202208:35:24 IST Report Abuse
N Annamalai சூப்பர் .இதற்க்கு ஐ நா சபை அங்கீகாரம் கொடுக்கலாம் .எல்லா நாடுகளும் இது போல் ஆரம்பிக்கலாம் .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X