தேசிய கல்விக்கொள்கையை செயல்படுத்த வேண்டும்: உ.பி., கவர்னர் பேச்சு

Added : செப் 29, 2022 | கருத்துகள் (9) | |
Advertisement
கோவை : ''அரசியல் விமர்சனங்களை கடந்து தேசிய கல்விக்கொள்கையை விரைவாக செயல்படுத்த வேண்டும்,'' என, உ.பி., கவர்னர் ஆனந்திபென் படேல் கூறினார்.கோவை அவிநாசிலிங்கம் பல்கலையில் தேசிய அளவிலான கருத்தரங்கில் பங்கேற்ற உ.பி., மாநில கவர்னர் ஆனந்திபென் படேல் மாணவியருக்கு விருது வழங்கி பேசியதாவது:கவர்னர் பணியில் இருந்த இந்த மூன்றாண்டுகளில் உ.பி.,யில் 75 மாவட்டங்களை ஆய்வு
Anandiben Patel,Governor,Uttar Pradesh,ஆளுநர்,உத்தரபிரதேசம்,கவர்னர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

கோவை : ''அரசியல் விமர்சனங்களை கடந்து தேசிய கல்விக்கொள்கையை விரைவாக செயல்படுத்த வேண்டும்,'' என, உ.பி., கவர்னர் ஆனந்திபென் படேல் கூறினார்.

கோவை அவிநாசிலிங்கம் பல்கலையில் தேசிய அளவிலான கருத்தரங்கில் பங்கேற்ற உ.பி., மாநில கவர்னர் ஆனந்திபென் படேல் மாணவியருக்கு விருது வழங்கி பேசியதாவது:கவர்னர் பணியில் இருந்த இந்த மூன்றாண்டுகளில் உ.பி.,யில் 75 மாவட்டங்களை ஆய்வு செய்துள்ளேன். பெண்களுக்கான பிரச்னைகள், சிறையில் இருக்கும் பெண்களுடன் கலந்துரையாடல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளேன்.



latest tamil news


உ.பி.,யில் 85 ஆயிரம் காச நோயாளிகளை பராமரித்து வருகிறோம். 2050ல் காசநோய் இல்லாத நாடாக இந்தியா மாறும். அரசியல் விமர்சனங்களை கடந்து தேசிய கல்விக் கொள்கையை விரைவாக செயல்படுத்த வேண்டும். புதிய இலக்குகளை அடைய வேண்டும். தேசிய கல்விக்கொள்கையின் தன்மை, இந்திய கொள்கையை வெற்றிகரமாக செயல்படுத்துவதன் வாயிலாக அறிவோடு மாணவர்களின் தேவைக்கேற்ப திறன்களும் வளர்க்கப்படும்.



அது திறமை வாய்ந்த இளைஞர்களை உருவாக்கி, தேசத்தின் மீதான மரியாதையை எழுப்பும். ஒவ்வொரு பிரிவை சேர்ந்த மாணவர்களுக்கும், சிறந்த அறிவு சென்றடைய வேண்டும் என்பதே, இக்கொள்கையின் நோக்கம். இவ்வாறு அவர் பேசினார்.



அவினாசிலிங்கம் கல்வி அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் மீனாட்சி சுந்தரம், அவினாசிலிங்கம் பல்கலை வேந்தர் தியாகராஜன், துணைவேந்தர் பாரதி ஹரிசங்கர், பதிவாளர் கவுசல்யா உட்பட பலர் பங்கேற்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
venugopal s -  ( Posted via: Dinamalar Android App )
29-செப்-202219:27:09 IST Report Abuse
venugopal s நான் கூட நம்ம ஆளுநர் மட்டும் தான் என்று நினைத்தேன்,பாஜக ஆட்சியில் எல்லா மாநில ஆளுநர்களும் ஒரு மாதிரியாகவே இருக்கின்றனர்.
Rate this:
Cancel
S.Baliah Seer - Chennai,இந்தியா
29-செப்-202212:33:43 IST Report Abuse
S.Baliah Seer அது கோச்சிங் சென்டர் கல்விக் கொள்கை. தேசிய கல்விக் கொள்கை அல்ல. பள்ளிப்படிப்பின் மார்க்குகளூக்கு மரியாதை கொடுக்காத எந்த ஒரு கல்வியும் ஏமாற்றே
Rate this:
29-செப்-202216:02:02 IST Report Abuse
ஆரூர் ரங்ஒன்பதாம் வகுப்பு வரை ஆல் ஓசி பாஸ்? இந்த லட்சணத்தில் எந்த நுழைவுத் தேர்விலும் நம் மாணவர்கள் வெற்றி பெற வாய்ப்பே இல்லை😇😇 . பள்ளியிலேயே சிறப்பான கோச்சிங் கொடுத்தால் ஏன் வெளியே கோச்சிங் எடுக்க போவார்கள்?....
Rate this:
Cancel
Yogeshananda - Erode,இந்தியா
29-செப்-202210:57:31 IST Report Abuse
Yogeshananda உடனடியாக செயல்படுத்த வேண்டும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X