திருவாடானை,-திருவாடானை அருகே கருமொழி ஊராட்சியில் குடிநீர் தட்டுப்பாடு நிலவுவதால் ஆழ்துளை கிணறு அமைக்க மக்கள் வலியுறுத்தினர்.கருமொழி ஊராட்சியில் கோவனி, சானாவயல், ஆட்டூர் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. பல ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட ஆழ்துளை கிணறுகள் செயல்படாமல் போனதால் கிராமங்களுக்கு தேவையான குடிநீர் வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.கருமொழி ஊராட்சி தலைவர் முத்துராமலிங்கம் கூறுகையில், கிராமங்களுக்கு காவிரி குடிநீர் போதிய அளவில் விநியோகம் இல்லாததால் குடிநீர் தட்டுப்பாடு அதிகமாக உள்ளது. கிராம மக்கள் அவதிப்படுகின்றனர். ஊராட்சிக்கு சிறப்பு நிதி ஒதுக்கி புதிய ஆழ்துளை கிணறுகள் அமைக்க கோரி மனு அளிக்கபட்டுள்ளது, என்றார்.