பயங்கரவாதத்திற்கு தி.மு.க., துணை போனதில்லை: துரைமுருகன்

Added : செப் 29, 2022 | கருத்துகள் (48) | |
Advertisement
வேலுார் : ''பயங்கரவாதத்திற்கு, தி.மு.க., துணை போனதில்லை,'' என, நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கூறினார்.வேலுார் மாவட்டம், காட்பாடி அருகே, பொன்னை ஆற்றின் குறுக்கே, 40 கோடி ரூபாயில் கட்டப்பட உள்ள உயர்மட்ட மேம்பாலத்திற்கு அடிக்கல் நாட்டும் விழா, கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தலைமையில் நேற்று நடந்தது.அமைச்சர் துரைமுருகன் அடிக்கல் நாட்டி பேசும் போது, ''சென்னை முதல்
DMK, Durai Murugan, BJP

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

வேலுார் : ''பயங்கரவாதத்திற்கு, தி.மு.க., துணை போனதில்லை,'' என, நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கூறினார்.

வேலுார் மாவட்டம், காட்பாடி அருகே, பொன்னை ஆற்றின் குறுக்கே, 40 கோடி ரூபாயில் கட்டப்பட உள்ள உயர்மட்ட மேம்பாலத்திற்கு அடிக்கல் நாட்டும் விழா, கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தலைமையில் நேற்று நடந்தது.



அமைச்சர் துரைமுருகன் அடிக்கல் நாட்டி பேசும் போது, ''சென்னை முதல் பெங்களூரூ வரை விரைவுச்சாலை, 10 ஆயிரம் கோடி ரூபாயில் அமைக்கப்படுகிறது. அதற்கான நில ஆர்ஜித பணி நடக்கிறது,'' என்றார்.


latest tamil news



பின் அவர் கூறியதாவது: கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே ஆந்திரா மாநில அரசு புதிய அணை கட்டாமலிருக்க, தமிழக அரசு ஏற்கனவே உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளது; இதனால் அணை கட்ட முடியாது. அதை மீறி அணை கட்ட முயற்சித்தால் வழக்கை துரிதப்படுத்துவோம்.



தி.மு.க., பயங்கரவாதத்திற்கு துணை போவதாக, மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் அஸ்வினி குமார் கூறியுள்ளார்; அவர் விபரம் தெரியாத அமைச்சர். எக்காலத்திலும் பயங்கரவாதத்திற்கு, தி.மு.க., துணை போனதில்லை.இவ்வாறு கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (48)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Suppan - Mumbai,இந்தியா
29-செப்-202216:02:00 IST Report Abuse
Suppan சரியாகத்தான் பெயர் வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
Rate this:
Cancel
Vena Suna - Coimbatore,இந்தியா
29-செப்-202214:29:40 IST Report Abuse
Vena Suna ஆமாம். உண்மை தான்.அவர்களே நேரடியாக பயங்கரவாதம் செய்து தான் பழக்கம்.
Rate this:
Cancel
29-செப்-202213:18:47 IST Report Abuse
மதுமிதா இதை சட்டசபை நாயகன் செல்கிறார் பெட்ரோல் குண்டுவீச்சிலும் மௌனம் காப்பர்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X