எஸ்.ஐ., குமுறல் 'ஆடியோ': டி.ஜி.பி., ஆறுதல் கடிதம்

Added : செப் 29, 2022 | கருத்துகள் (28) | |
Advertisement
சென்னை : பணிச்சூழலால், மகளின் நிச்சயதார்த்த நிகழ்வில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டதற்கு வருத்தம் தெரிவித்து, சிறப்பு எஸ்.ஐ.,க்கு, டி.ஜி.பி., சைலேந்திரபாபு கடிதம் எழுதியுள்ளார்.சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் சிறப்பு எஸ்.ஐ.,யாக பணிபுரிபவர் சந்தானராஜ். இவர், இரு தினங்களுக்கு முன், 'ஆடியோ' ஒன்றை வெளியிட்டார். அதில், அவர் கூறியிருப்பதாவது: மகளுக்கு திருமண ஏற்பாடு
DGP, Sylendra Babu, சைலேந்திரபாபு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை : பணிச்சூழலால், மகளின் நிச்சயதார்த்த நிகழ்வில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டதற்கு வருத்தம் தெரிவித்து, சிறப்பு எஸ்.ஐ.,க்கு, டி.ஜி.பி., சைலேந்திரபாபு கடிதம் எழுதியுள்ளார்.

சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் சிறப்பு எஸ்.ஐ.,யாக பணிபுரிபவர் சந்தானராஜ். இவர், இரு தினங்களுக்கு முன், 'ஆடியோ' ஒன்றை வெளியிட்டார். அதில், அவர் கூறியிருப்பதாவது: மகளுக்கு திருமண ஏற்பாடு செய்துள்ளேன். மாப்பிள்ளை வீட்டாரும், என் மகளை பிடித்து இருப்பதாக சொல்லி விட்டனர்.



நாங்கள் குடும்பத்துடன் மாப்பிள்ளை வீடு பார்க்க செல்வதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தேன். உறவினர்களுக்கும் தகவல் தெரிவித்து விட்டேன்.கோவைக்கு பணியாற்ற செல்ல வேண்டும் என, இன்ஸ்பெக்டர் ஆதிலிங்கம் போஸ் கட்டாயப்படுத்துகிறார். மிகுந்த மன உளைச்சலில் உள்ளேன். சுபகாரியமும் தடைபட்டு விட்டது. இவ்வாறு சந்தானராஜ் மிகவும் வருத்தப்பட்டு கூறியுள்ளார்.



latest tamil news


இவருக்கு, டி.ஜி.பி., சைலேந்திரபாபு நேற்று எழுதியுள்ள கடிதம்: தங்களின் மகளின் நிச்சயதார்த்த நிகழ்ச்சி நடைபெற இருந்தது குறித்தும், அதில் பங்கேற்க தங்களுக்கு விடுப்பு மறுக்கப்பட்டது குறித்தும் கேள்விபட்டேன்; மிகுந்த மன வருத்தம் அடைந்தேன். இதுபோன்ற குடும்ப முக்கிய நிகழ்ச்சிகளில் பங்கேற்க, விடுப்பு வழங்க வேண்டும் என, உயர் அதிகாரிகளிடம் வலியுறுத்தப்பட்டு உள்ளது.



வரும் நாட்களில், தங்கள் மகளின் நிச்சயதார்த்த நிகழ்ச்சியை நடத்த ஏதுவாக, போதுமான நாட்கள் விடுப்பு வழங்க, மாவட்ட எஸ்.பி.,க்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (28)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
30-செப்-202205:07:18 IST Report Abuse
ராஜா SI மட்டுமல்ல தமிழ்நாட்டில் கொஞ்சம் மனசாட்சி இருக்கும் காவலர்கள் கூட அவர்கள் நிலையை நினைத்து குமுறிக்கொண்டு தான் இருகிறார்கள். வரும் தேர்தலில் காவல்துறை நண்பர்களின் ஓட்டு முழுவதும் அப்படியே அண்ணாமலைக்கு செல்வது உறுதி.
Rate this:
Cancel
Lion Drsekar - Chennai ,இந்தியா
29-செப்-202213:13:27 IST Report Abuse
Lion Drsekar தலைப்பு செய்தி அருமையாக இருக்கிறது ஆனால் உள்குத்து அனுபவிப்பவர்களுக்கே தெரியும். பாவம் புகார் கொடுத்த அந்த மனிதர், மிக மிக நீண்ட பதிவு செய்யவேண்டும் என்ற ஆவா ஆனால் அடக்கு அடக்கு என்கிறது கைகள், வந்தே மாதரம்
Rate this:
Cancel
Mohan - COIMBATORE,இந்தியா
29-செப்-202213:10:53 IST Report Abuse
Mohan ஏமி பாபுகாரு ..ஒரு தடவ சுப காரியம் நின்ன என்ன ஆகும்னு உங்களுக்கு தெரியாதா ...இதுக்கு ஒரு பாசாங்கு கடிதம் வேற... இந்த காலத்துல பொண்ணு கிடைக்குறதே பெரிசு ..அதுவும் தடை பட்டு போச்சுன்னா அவன் லைப் , தலைமுறை , குடும்ப மனா உளைச்சல், எல்லா பிரச்னையும் வந்து ஆட்டு ஆயிரும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X