'எச்சரிக்கையாக இருங்கள்': தொண்டர்களுக்கு ஆர்.எஸ்.எஸ்., அறிவுரை

Added : செப் 29, 2022 | கருத்துகள் (15) | |
Advertisement
சென்னை: பி.எப்.ஐ., என்ற 'பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா' அமைப்பு தடை செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து, எச்சரிக்கையுடன் இருக்குமாறு, ஆர்.எஸ்.எஸ்., நிர்வாகிகள், தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடப்பட்டுள்ளது.தமிழகம் உள்ளிட்ட, 15 மாநிலங்களில் உள்ள பி.எப்.ஐ., நிர்வாகிகள் வீடு, அலுவலகங்களில், செப்., 22-ம் தேதி என்.ஐ.ஏ., எனும் தேசிய புலனாய்வு பிரிவு, அமலாக்கத் துறை சோதனை நடத்தியது. அதைத்
RSS, PFI banned, Popular Front of India

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை: பி.எப்.ஐ., என்ற 'பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா' அமைப்பு தடை செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து, எச்சரிக்கையுடன் இருக்குமாறு, ஆர்.எஸ்.எஸ்., நிர்வாகிகள், தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடப்பட்டுள்ளது.

தமிழகம் உள்ளிட்ட, 15 மாநிலங்களில் உள்ள பி.எப்.ஐ., நிர்வாகிகள் வீடு, அலுவலகங்களில், செப்., 22-ம் தேதி என்.ஐ.ஏ., எனும் தேசிய புலனாய்வு பிரிவு, அமலாக்கத் துறை சோதனை நடத்தியது. அதைத் தொடர்ந்து, பி.எப்.ஐ., மற்றும் அதனுடன் தொடர்புடைய, கேம்பஸ் பிரன்ட் ஆப் இந்தியா, மனித உரிமை அமைப்புகளின் தேசிய கூட்டமைப்பு உள்ளிட்ட அமைப்புகள் தடை செய்யப்பட்டுஉள்ளன.



latest tamil news


இது தொடர்பாக, ஆர்.எஸ்.எஸ்., நிர்வாகிகளுக்கு அனுப்பப்பட்டு உள்ள செய்தியில், 'வீட்டில் இருக்கும்போதும், வெளியில் செல்லும்போதும் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அறிமுகம் இல்லாத நபர்கள், 'அட்மினாக' இருக்கும் 'வாட்ஸ் ஆப்' குழுக்களில் இருக்கக் கூடாது' என கூறப்பட்டுள்ளது.



ஆர்.எஸ்.எஸ்., நிர்வாகி ஒருவர் கூறியதாவது: பி.எப்.ஐ., அலுவலகங்களில், என்.ஐ.ஏ., நடத்திய சோதனையில், ஆர்.எஸ்.எஸ்., நிர்வாகிகள் பற்றிய விபரங்கள், அவர்களது வீடு, அலுவலக வரைபடங்கள் கண்டறியப்பட்டுள்ளன.ஒரு வாரமாக பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்களும் தொடர்ந்து வருகின்றன. எனவே, நிர்வாகிகள், தொண்டர்களை எச்சரிக்கையாக இருக்கும்படி வேண்டுகோள் விடுத்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
venugopal s -  ( Posted via: Dinamalar Android App )
29-செப்-202219:23:29 IST Report Abuse
venugopal s ,,,,,
Rate this:
Cancel
sankar - சென்னை,இந்தியா
29-செப்-202216:40:47 IST Report Abuse
sankar மக்கள் தான் உஷாரா இருக்கணும்
Rate this:
Cancel
sankar - சென்னை,இந்தியா
29-செப்-202216:34:27 IST Report Abuse
sankar மக்கள் தான் உஷாரா இருக்கணும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X