வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை: பி.எப்.ஐ., என்ற 'பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா' அமைப்பு தடை செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து, எச்சரிக்கையுடன் இருக்குமாறு, ஆர்.எஸ்.எஸ்., நிர்வாகிகள், தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடப்பட்டுள்ளது.
தமிழகம் உள்ளிட்ட, 15 மாநிலங்களில் உள்ள பி.எப்.ஐ., நிர்வாகிகள் வீடு, அலுவலகங்களில், செப்., 22-ம் தேதி என்.ஐ.ஏ., எனும் தேசிய புலனாய்வு பிரிவு, அமலாக்கத் துறை சோதனை நடத்தியது. அதைத் தொடர்ந்து, பி.எப்.ஐ., மற்றும் அதனுடன் தொடர்புடைய, கேம்பஸ் பிரன்ட் ஆப் இந்தியா, மனித உரிமை அமைப்புகளின் தேசிய கூட்டமைப்பு உள்ளிட்ட அமைப்புகள் தடை செய்யப்பட்டுஉள்ளன.
![]()
|
இது தொடர்பாக, ஆர்.எஸ்.எஸ்., நிர்வாகிகளுக்கு அனுப்பப்பட்டு உள்ள செய்தியில், 'வீட்டில் இருக்கும்போதும், வெளியில் செல்லும்போதும் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அறிமுகம் இல்லாத நபர்கள், 'அட்மினாக' இருக்கும் 'வாட்ஸ் ஆப்' குழுக்களில் இருக்கக் கூடாது' என கூறப்பட்டுள்ளது.
ஆர்.எஸ்.எஸ்., நிர்வாகி ஒருவர் கூறியதாவது: பி.எப்.ஐ., அலுவலகங்களில், என்.ஐ.ஏ., நடத்திய சோதனையில், ஆர்.எஸ்.எஸ்., நிர்வாகிகள் பற்றிய விபரங்கள், அவர்களது வீடு, அலுவலக வரைபடங்கள் கண்டறியப்பட்டுள்ளன.ஒரு வாரமாக பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்களும் தொடர்ந்து வருகின்றன. எனவே, நிர்வாகிகள், தொண்டர்களை எச்சரிக்கையாக இருக்கும்படி வேண்டுகோள் விடுத்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.