வைகோ மகன் சர்ச்சை பேச்சு: ம.தி.மு.க.,வில் கடும் எதிர்ப்பு

Updated : செப் 29, 2022 | Added : செப் 29, 2022 | கருத்துகள் (38) | |
Advertisement
ம.தி.மு.க. தலைமை நிலைய செயலர் துரை வைகோவின் சர்ச்சைக்குரிய பேச்சு மூத்த நிர்வாகிகளை அதிருப்தி அடைய வைத்துள்ளது. காஞ்சிபுரம் மாவட்ட செயலர் வளையாபதி தன் பதவியை ராஜினாமா செய்து அதிருப்தியை வெளிப்படுத்தி உள்ளார்.இக்கட்சியின் பொதுச்செயலர் வைகோவின் மகன் துரை 'மாமனிதன் வைகோ' என்ற ஆவணப் படத்தை தயாரித்திருக்கிறார். அதை தென் மாவட்டங்களில் உள்ள தியேட்டர்களில் வெளியிட்டு
Durai Vaiko, MDMK, Durai, Vaiko,துரை,வைகோ

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

ம.தி.மு.க. தலைமை நிலைய செயலர் துரை வைகோவின் சர்ச்சைக்குரிய பேச்சு மூத்த நிர்வாகிகளை அதிருப்தி அடைய வைத்துள்ளது. காஞ்சிபுரம் மாவட்ட செயலர் வளையாபதி தன் பதவியை ராஜினாமா செய்து அதிருப்தியை வெளிப்படுத்தி உள்ளார்.இக்கட்சியின் பொதுச்செயலர் வைகோவின் மகன் துரை 'மாமனிதன் வைகோ' என்ற ஆவணப் படத்தை தயாரித்திருக்கிறார். அதை தென் மாவட்டங்களில் உள்ள தியேட்டர்களில் வெளியிட்டு கட்சியினரை பார்க்க அழைக்கிறார்; சில ஊர்களில் படம் பார்க்க கட்சியினர் வரவில்லை. இதனால் அதிருப்தி அடைந்த துரை கட்சி நிர்வாகிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.கோவில்பட்டியில் அவர் பேசுகையில் 'ம.தி.மு.க.வுக்கு விசுவாசமாக இருப்பவர்கள் உழைப்பவர்கள் மட்டும் தான் தேவை. மற்றவர்களுக்கு கதவு திறந்து வைக்கப்பட்டுள்ளது; அவர்கள் வெளியேறலாம். 'தயவு தாட்சண்யம் பார்க்க மாட்டேன். வெட்டு ஒன்று; துண்டு இரண்டு என்ற முடிவு தான் நான் எடுப்பேன்' என்றார்.
latest tamil news


காஞ்சிபுரம் மாவட்ட செயலர் வளையாபதி அறிக்கை: துரை வெளியேறச் சொன்னதை ஏற்கிறேன். ஆரம்ப காலத்தில் 11 பேர் குழுவில் இடம்பெற்று கட்சி பணி துவக்கினேன். குப்பை கழிவுகள் இருக்கும் இடத்தில் கூட சுவர் விளம்பரம் செய்தோம். அந்த காலத்தில் 'டிஜிட்டல்' பேனர்கள் கிடையாது. என்னை போன்ற மூத்தவர்கள் இளைஞர்களுக்கு வழிவிட்டு கட்சி வளர்ச்சிக்கு உதவ வேண்டும். அதற்கு முன்னுதாரணமாக நான் பதவியில் இருந்து விலகுகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
சமூக வலைதளங்களில் ம.தி.மு.க.வினர் பதிவு:


* துரை எப்போது சர்வாதிகாரியாக மாறினார்... யார் இவர்.. இவருக்கும் கட்சிக்கும் என்ன சம்பந்தம்.. வாரிசு அரசியலை எதிர்த்து ஐந்து பேர் தீ குளித்து அப்பாவி தொண்டர்களின் வியர்வையில் உருவான கட்சி இது. இவர் என்ன கட்சிக்கு தலைவரா. இவருக்காகவா தொண்டர்கள் கட்சியில் இருக்கின்றனர். வாழ்க்கையில் 'செட்டில்' ஆகி விட்டு அரசியலுக்கு வந்துள்ளார்.* வைகோவுக்காக உழைத்து உழைத்து ஓடாய் போனவர்களை வெளியேற சொல்ல அவரே விரும்ப மாட்டார். இதை வைகோ கண்டிக்கிறாரா அல்லது ஊக்குவிக்கிறாரா. முதலில் துரை வெளியேறட்டும்! இவ்வாறு அவர்கள் பதிவிட்டுள்ளனர்.- நமது நிருபர் -

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (38)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
BALU - HOSUR,இந்தியா
29-செப்-202217:17:04 IST Report Abuse
BALU என்ன துரை உங்களைச் சுற்றி எத்தனைப் பேர் இருக்காங்கன்னு எண்ணிக்கூடப் பார்க்காம பளிச்சின்னு இப்படி சொல்லிட்டீங்க மதிமுக-வில் மிச்சம் இருக்கிறது நீங்களும் உங்கப்பாவும் தான்.பாவம் அவர்,இந்நேரம்கூட பெட்டிக் கிடைக்குமான்னு அலைஞ்சிக்கிட்டிருப்பாரு. தேர்தல் வரும்போது அவரும் அதுக்காக வெளியேறிவிடுவார்.மீதி யார்??
Rate this:
Cancel
Sankar Ramu - Carmel,யூ.எஸ்.ஏ
29-செப்-202217:12:47 IST Report Abuse
Sankar Ramu பணம் சம்பாதிக்க இவருக்கு கட்சி. ஏன்கட்சிகாரனுக்கு டிக்கெட் இலவசம் சொல்லு
Rate this:
Cancel
Yaro Oruvan - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
29-செப்-202216:15:51 IST Report Abuse
Yaro Oruvan அன்னே அன்னே.. நம்ம உதயன்னாகிட்ட சொல்லி ரெட் ஜெயண்ட்ல உலகம் முழுக்க வெளியிடுங்க.. பாகுபலி வசூலை மிஞ்சிரும் மாமாமனிதன்..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X