வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை : தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை இரு வார பயணமாக, நாளை(செப் 30) அமெரிக்கா செல்கிறார்.
கடந்த ஏப்ரல் 30ல் அண்ணாமலை, இலங்கை சென்றார். யாழ்பாணம் உட்பட பல பகுதிகளுக்கு சென்ற அவர், இலங்கை தமிழர்கள், தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர்கள் என, பலரையும் சந்தித்து பேசினார். இந்நிலையில், அண்ணாமலை நாளை அமெரிக்கா செல்கிறார்.
![]()
|
அவர் தன் உயர் கல்வி தொடர்பாகவே, அமெரிக்கா செல்வதாக தெரிகிறது. இருப்பினும், அந்நாட்டில் உள்ள தமிழர்களையும் சந்தித்து பேச திட்டமிட்டுள்ளார். அமெரிக்க பயணத்தை முடித்து, அக்., 12ல், அண்ணாமலை சென்னை திரும்ப உள்ளார்.