அயோத்தி சாலைக்கு லதா மங்கேஷ்கர் பெயர்

Added : செப் 29, 2022 | கருத்துகள் (1) | |
Advertisement
அயோத்தி : உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள முக்கிய சாலை சந்திப்புக்கு, மறைந்த பிரபல பாடகி லதா மங்கேஷ்கரின் பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர் மோடி, அவருக்கு புகழஞ்சலி செலுத்தினார்.மறைந்த பிரபல பின்னணி பாடகி லதா மங்கேஷ்கரின் பிறந்தநாளையொட்டி, உத்தர பிரதேசத்தின் அயோத்தியில் உள்ள சாலைக்கு அவருடைய பெயர் சூட்டப்பட்டது. இந்த
Ayodhya,PM Modi, Lata Mangeshkar, அயோத்தி, பிரதமர் மோடி,  பாடகி லதா மங்கேஷ்கர்,  Prime Minister Modi, singer Lata Mangeshkar,

அயோத்தி : உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள முக்கிய சாலை சந்திப்புக்கு, மறைந்த பிரபல பாடகி லதா மங்கேஷ்கரின் பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர் மோடி, அவருக்கு புகழஞ்சலி செலுத்தினார்.

மறைந்த பிரபல பின்னணி பாடகி லதா மங்கேஷ்கரின் பிறந்தநாளையொட்டி, உத்தர பிரதேசத்தின் அயோத்தியில் உள்ள சாலைக்கு அவருடைய பெயர் சூட்டப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடியின் பேச்சு ஒலிபரப்பப்பட்டது.



அதில் அவர் கூறியுள்ளதாவது: அயோத்தி முதல் ராமேஸ்வரம் வரை, ராமர் எங்கும் நிறைந்துள்ளார். தன் பக்தி பாடல்கள் வாயிலாக ராமரை நம் மனதில் நிலைநிறுத்தியுள்ளார் லதா மங்கேஷ்கர். அவருடைய குரலால் ராமரை மக்கள் உணர்ந்துள்ளனர்.அயோத்தியில் ராமர் கோவிலுக்கு அடிக்கல் நாட்டியபின், என்னை அழைத்து அவர் வாழ்த்தும், நன்றியும் தெரிவித்தார். இவ்வாறு அவர் கூறினார்.



பா.ஜ.,வைச் சேர்ந்த மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர். இந்த சாலையில், கல்விக் கடவுள் சரஸ்வதியை குறிக்கும் வகையில், பிரமாண்ட வீணை சிலை அமைக்கப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
29-செப்-202212:19:13 IST Report Abuse
அப்புசாமி அங்கே வீணை சிலை. இங்கே பேனா சிலை. ரெண்டும் தண்டம். லதா ஜீ பிறந்தது மத்திய பிரதேஷில் இந்தூர் நகரம். அவருக்கு எதுக்கு அயோத்யாவில் சதுக்கம்? எப்படியாவது தண்டச் செலவு பண்ணனும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X