தேனி -தேனி மாவட்டத்தில் மாற்றுதிறனாளிகளுக்கு ஸ்கூட்டர், வீல்சேர் வழங்குவதற்கான பயனாளிகள் தேர்வு செய்ய நேர்முக தேர்வு மாற்றுத்திறனாளி அலுவலகத்தில் கலந்தாய்வு நடந்தது. இதில் 65 பயனாளிகளுக்கு அழைப்பு விடுத்ததில் 54 பயனாளிகள் பங்கேற்றனர். முதுகுதண்டுவட பாதித்தவர்களுக்கான பிரத்யோக பைக் மற்றும் ஸ்கூட்டர் 44 பேருக்கும், பேட்டரி மூலம் இயங்கும் வீல் சேர் 10 பேருக்கும் வழங்க தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அரசு நிதி ஒதுக்கீடு வழங்கியதும் வாகனங்கள் பயனாளிகளுக்கு வழங்கப்படும் என மாவட்ட மாற்றுதிறனாளிகள் நல அலுவலர் சகுந்தலா தேவி கூறியுள்ளார்.