மதுரை -வேளாண் துறை சார்பில் சிறந்த தொழில்நுட்பம் மற்றும் வேளாண் இயந்திரங்கள் கண்டுபிடிப்பு திட்டத்திற்கு மாநில அளவில் ரூ.ஒரு லட்சம் பரிசு, விருது வழங்கப்படுகிறது.புதிய கண்டுபிடிப்பு, தொழில்நுட்பங்களை செயல்படுத்தும் விவசாயிகளை கண்டறிய மாவட்ட அளவில் குழு அமைக்கப்பட்டுள்ளது. விருது பெற விரும்பும் விவசாயிகள் உழவன் செயலியில் விண்ணப்பத்தை பதிவேற்றம் செய்ய வேண்டும். வயது வரம்பு இல்லை.கண்டுபிடித்த தொழில்நுட்பம் மற்ற விவசாயிகள் எளிதில் பயன்படுத்தும் வகையில் இருக்க வேண்டும். கோவை வேளாண் பல்கலை விஞ்ஞானிகளிடம் கண்டுபிடிப்பு குறித்து குறிப்பு பெற வேண்டும். பதிவு கட்டணம் ரூ.100. கூடுதல் விவரங்களுக்கு வேளாண் விரிவாக்க மையங்களை அணுகலாம் என, வேளாண் இணை இயக்குனர் விவேகானந்தன் தெரிவித்துள்ளார்.