காரைக்கால் : ஆற்றங்கரையில் தொழிலாளி இறந்த கிடந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
காரைக்கால், நெடுங்காடு அடுத்த மேலகாசாகுடியை சேர்ந்தவர் அருமைநாதன்,52; கூலி தொழிலாளியான இவர் வீட்டில் இருந்து வெளியே சென்றவர் வெகு நேரமாகியும் வீட்டிற்கு வரவில்லை.சந்தேகமடைந்த குடும்பத்தார் தேடியபோது, அருமைநாதன் ஆற்றங்கரை அருகே இறந்து கிடப்பது தெரிய வந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் நெடுங்காடு போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.