புதுச்சேரி : சுருக்குவைலை விவகாரம் தொடர்பாக இரு கிராம மீனவர்களிடையே ஏற்பட்ட பிரச்னை தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினர்.
புதுச்சேரியில் சுருக்குவலை பயன்படுத்துவது தொடர்பாக நல்லவாடு - வீராம்பட்டினம் மீனவர்களிடையே அடிக்கடி பிரச்னை ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில், நேற்று மாலை வீராம்பட்டினம் வழியாக சென்ற, நல்லவாடு மீனவர்களின் படகை, வீராம்பட்டினம் மீனவர்கள் மறித்துள்ளனர். இதனால், இருதரப்பினருக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டது. இதுபற்றி தகவலறிந்த ஒதியன்சாலை போலீசார் தேங்காய்திட்டு துறைமுகத்திற்கு விரைந்து சென்ற, பிரச்னை குறித்து இருதரப்பு மீனவர்களிடம் விசாரித்தனர்.