'பி.சி.ஆர்., சட்டத்தை அரசு தவறாக பயன்படுத்தியுள்ளது'

Updated : செப் 29, 2022 | Added : செப் 29, 2022 | கருத்துகள் (4) | |
Advertisement
கோவை: 'பி.சி.ஆர்., சட்டத்தை அரசு தவறாக பயன்படுத்தியுள்ளது,'' என, பா.ஜ., முன்னாள் எம்.பி., சி.பி.ராதாகிருஷ்ணன் கூறினார்.தி.மு.க., எம்.பி., ராஜா குறித்து, கோவை மாநகர் மாவட்ட பா.ஜ., தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி, சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக, வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவரை, பா.ஜ., முன்னாள் எம்.பி.,

கோவை: 'பி.சி.ஆர்., சட்டத்தை அரசு தவறாக பயன்படுத்தியுள்ளது,'' என, பா.ஜ., முன்னாள் எம்.பி., சி.பி.ராதாகிருஷ்ணன் கூறினார்.

தி.மு.க., எம்.பி., ராஜா குறித்து, கோவை மாநகர் மாவட்ட பா.ஜ., தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி, சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக, வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவரை, பா.ஜ., முன்னாள் எம்.பி., சி.பி.ராதாகிருஷ்ணன் நேற்று சந்தித்து பேசினார்.



latest tamil news




பின், நிருபர்களிடம் அவர் கூறியதாவது:
தீண்டாமைக்கு எதிரான, பி.சி.ஆர்., சட்டத்தை, தமிழக அரசு தவறாக பயன்படுத்தியுள்ளது. மாற்று அரசியல் சிந்தனையே இருக்கக் கூடாது என அரசு நினைக்கிறது. இது ஒரு தவறான முன்னுதாரணம். பி.சி.ஆர்., சட்டத்தில் கைதான பாலாஜி உத்தம ராமசாமியை, ஜாமினில் எடுக்க, பா.ஜ., வக்கீல்கள் சட்டரீதியாக முயன்று வருகின்றனர்.

பி.எப்.ஐ., அமைப்பு மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது வரவேற்கத்தக்கது. தடை செய்யப்பட்ட அமைப்புக்கு ஆதரவாக யார் செயல்பட்டாலும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
சீனி - Bangalore,இந்தியா
29-செப்-202208:37:28 IST Report Abuse
சீனி கிரிப்டோ ராசா தலித்தா இல்லையா என நிரூபிக்க சொல்லி என பாஜக வழக்கு போடவேண்டும்.
Rate this:
Cancel
VENKATASUBRAMANIAN - bangalore,இந்தியா
29-செப்-202207:57:29 IST Report Abuse
VENKATASUBRAMANIAN எல்லோரும் ஆர்பாரதி போட்ட பிச்சையில் வந்திருப்பார்கள் போலும்.
Rate this:
Cancel
Cheran Perumal - Radhapuram,இந்தியா
29-செப்-202207:18:45 IST Report Abuse
Cheran Perumal அரசு தவறாக பயன்படுத்துகிறது என்றால் அந்த குற்றத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்ட நீதிபதியை என்ன சொல்வது?
Rate this:
Sethu Thangavelu - Chennai,இந்தியா
29-செப்-202219:10:36 IST Report Abuse
Sethu Thangaveluநீதிபதி பயத்துல உள்ளெ அனுப்பி விட்டார் , காசு வாங்கி நீதி சொல்லும் அளவுக்கு தைரியம் இன்னும் வரவில்லை ...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X