இளம் வயது மாரடைப்பு அதிகரிக்க இதுதான் காரணம்! | Dinamalar

இளம் வயது மாரடைப்பு அதிகரிக்க இதுதான் காரணம்!

Updated : செப் 29, 2022 | Added : செப் 29, 2022 | கருத்துகள் (11) | |
கோவை: இன்றைய மாறிவரும் வாழ்க்கை முறையில், இருதயத்தை ஆரோக்கியமாக வைத்து கொள்வது மிகவும் முக்கியமானது. இருதய நோய் வராமல் தடுப்பது, உணவு பழக்க வழக்கம், ஆரோக்கியமான வாழ்க்கை பற்றியெல்லாம், இருதய சிகிச்சை நிபுணர் டாக்டர் ராஜ்பால் விரிவாக விளக்குகிறார்.இளவயதினர் பலரும் மாரடைப்பால் உயிரிழக்கின்றனர்; அதை அவர்கள் உணர முடியாததற்கு காரணம் என்ன ?இந்த பிரச்னை பல

கோவை: இன்றைய மாறிவரும் வாழ்க்கை முறையில், இருதயத்தை ஆரோக்கியமாக வைத்து கொள்வது மிகவும் முக்கியமானது. இருதய நோய் வராமல் தடுப்பது, உணவு பழக்க வழக்கம், ஆரோக்கியமான வாழ்க்கை பற்றியெல்லாம், இருதய சிகிச்சை நிபுணர் டாக்டர் ராஜ்பால் விரிவாக விளக்குகிறார்.latest tamil newsஇளவயதினர் பலரும் மாரடைப்பால் உயிரிழக்கின்றனர்; அதை அவர்கள் உணர முடியாததற்கு காரணம் என்ன ?


இந்த பிரச்னை பல நாட்களாக உள்ளது. சமீப காலங்களாக இளைஞர்களிடம் அதிகரித்து வரும் புகைப்பழக்கம், மன அழுத்தம் இருதயத்தில் பிரச்னையை ஏற்படுத்துகிறது.
இருதய வலியையும், வாயுவினால் ஏற்படும் வலியையும் எப்படி வித்தியாசப்படுத்தி அறிவது?

மாடிப்படி ஏறும் போது, ஏதாவது பணிகள் செய்யும் போது நெஞ்சு பகுதியில் வலி எடுத்தால், அது இருதய வலி.ரத்த அழுத்தம், சர்க்கரை எதுவும் இல்லாதவர்களுக்கு, நெஞ்சு, முதுகில் வலி ஏற்பட்டால் அது வாயு பிரச்னை.
வாக்கிங், யோகா, உணவுக்கட்டுப்பாடு என இருதய நோயைத் தடுக்க, பலவிதமான யோசனைகள் தரப்படுகின்றன... இதில் எது முதன்மையானது?

இருதய நோயை தடுக்க இதுதான் முக்கியம் என, கூற முடியாது. உடற்பயிற்சி, யோகா, உணவு கட்டுப்பாடு அனைத்தையும் சரியாக கடைபிடிக்க வேண்டும். அப்போது தான் இருதய நோயிலிருந்து தப்ப முடியும்.
உடல் பாதிப்பை விட, வேலைப்பளு, மன அழுத்தத்தால் மாரடைப்புக்கு உள்ளாகிறவர்களின் எண்ணிக்கை இப்போது அதிகமாக உள்ளதே...?

இந்த உலகத்தில் மன அழுத்தம், வேலைப்பளு இருக்கத்தான் செய்யும். ஒரு வேலை செய்யும் போது கஷ்டங்கள் வரலாம். பிரச்னைகள் ஏற்படலாம். அதனை பொறுமையாக கையாள வேண்டும். மன அழுத்தத்தை போக்க, குறைந்தது தியானம் செய்ய வேண்டும். குடும்பத்துடன் நேரத்தை செலவிட வேண்டும்.latest tamil newsசர்க்கரை, ரத்த அழுத்தம் உள்ளவர்களைத் தவிர, வேறு எந்த விதமான உடல் பாதிப்பு உள்ளவர்களுக்கு, இருதய நோய் தாக்கும் அபாயம் இருக்கிறது?

அதிக புகைப்பழக்கம் கொண்ட நபர்கள், மன அழுத்தம், அதிக உடற்பயிற்சி மேற்கொள்ளும் நபர்கள், மரபு வழியாக இருதய நோய் பிரச்னை உள்ளவர்கள் கவனமாக இருக்க வேண்டும்.
நீண்ட காலமாக சர்க்கரை நோய்க்கும், ரத்த அழுத்தத்துக்கும் சரியாக மருந்து எடுப்பவர்களுக்கும், மாரடைப்பு வருகிறதே...?

நல்ல கேள்வி. இந்த பிரச்னையை இரண்டு வகையாக பார்க்கலாம். முதலில் இருதய நோயால் பாதிக்கப்பட்ட நபர்கள், தொடர்ந்து மருந்து உட்கொள்ள வேண்டும். சிலர் பாதியில் விட்டு விடுகின்றனர். இரண்டாவது, சர்க்கரை நோய் அதிகம் இருந்தால், இருதய நோய் மீண்டும் வர வாய்ப்புள்ளது. நோய் வராமல் தடுக்கலாம். ஆனால் உறுதியாக வராது என, சொல்ல முடியாது.சமீப காலமாக நல்ல ஆரோக்கியமான விளையாட்டு வீரர்கள், பயிற்சியின் போது திடீரென உயிரிழப்பது அதிகரித்துள்ளது. இதற்கு காரணமென்ன?

இது, 'ஹைபோடிராபிக் கார்டியோமயோபதி'. இது ஒரு தனி வகையான இருதய பிரச்னை. சில நபர்களுக்கு இருதயம் சற்று வீக்கம் அடையும். உதாரணமாக உடற்பயிற்சியின்போது திடீரென இருதயத்தின் துடிப்பு அதிகரிக்கும். 70 ஆக இருக்க வேண்டிய துடிப்பு, 200க்கும் மேல் துடிக்கும் போது, அதன் செயல் திறன் நின்றுவிடும். இந்த பிரச்னை, இளைஞர்களுக்கு மட்டும் தான் ஏற்படும்.
மாரடைப்பு ஏற்பட்டு, 'ஸ்டென்ட்' வைப்பவர்கள் பலருக்கும், சில ஆண்டுகளிலேயே மீண்டும் மாரடைப்பு வருகிறதே...?

சர்க்கரை நோய் உள்ள நபர்களுக்கு, மீண்டும் மாரடைப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. இதற்கு பல காரணங்கள் உள்ளன. 'ஸ்டென்ட்' வைத்த நபர்களுக்கு, புதிதாக 'பிளாக்' உருவாகலாம். ஒரு சிலர் சரியாக மருந்துகளை உட்கொள்ளாமல் இருப்பதும் காரணம். இன்னும் ஒரு சிலருக்கு எவ்வளவு தான் ஸ்டென்ட், மருந்துகள் சாப்பிட்டாலும் மாரடைப்பு வர வாய்ப்புள்ளது.latest tamil newsஇருதய நோய் பாதிப்புக்கு ஆளாவதில், ஆண் - பெண் விகிதாச்சாரம் எப்படி உள்ளது... அதற்கு சிறப்பு காரணங்கள் எதுவும் இருக்கிறதா?

பெண்களுக்கு இருதய நோய் வராமல் தடுக்க ஹார்மோன் உள்ளது. மாதவிடாய் முடிவு பெறும் வயதில், வர வாய்ப்புள்ளது. நம் நாட்டில் பெண்கள் புகைப்பிடிப்பது, மது அருந்துதல் போன்ற பழக்கங்கள் இல்லை. ஆனால் இது ஆண்களுக்கு உண்டு.இருதய நோய் வர, வாழ்க்கை முறை முக்கிய காரணம். எந்த துறையைச் சேர்ந்தவர்கள், அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்?

ஐ.டி., நிறுவன இளைஞர்களுக்கு, இந்த பிரச்னை அதிகம் வர வாய்ப்புள்ளது. ஒரே இடத்தில் அதிக நேரம் உட்கார்ந்து வேலை செய்வது, மன அழுத்தத்தை போக்க புகைப்பிடிப்பது போன்றவை காரணங்கள். இவர்களுக்கு உடல் உழைப்பு இல்லை. நடப்பதும் கிடையாது.
கொரோனா பாதிப்புக்குள்ளானவர்களுக்கு, இருதய நோய் பாதிப்பு அதிகம் வருவதாகத் தெரிகிறதே...?

ஆமாம்... முதல் அலையின்போது ஏற்பட்ட கொரோனாவின் பாதிப்புக்கும், தற்போதைய கொரோனாவின் பாதிப்புக்கும் வித்தியாசம் உள்ளது. முதல் அலையில் நோயின் வீரியம் அதிகம் இருந்ததால், இருதயம் பாதிக்கப்பட்டது. அப்போது கொரோனா பாதித்த நபர்களில், ஒரு சிலருக்கு மட்டுமே இருதய பாதிப்பு ஏற்படுகிறது. தற்போதைய கொரோனாவால் பாதிப்பு குறைவு.
சர்க்கரை நோயாளிகள், அவர்களின் இருதயத்தை பாதுகாக்க என்ற செய்ய வேண்டும்?

சர்க்கரை நோயாளிகள் 'ஸ்டேட்டின்' மருந்தை முறையாக சாப்பிட வேண்டும். உடற்பயிற்சி முறையாக செய்ய வேண்டும். தற்போது புது வகை மாத்திரைகள் சந்தைக்கு வந்துள்ளன. குறிப்பாக எடை குறைக்கும் மாத்திரைகள் உட்கொள்ள வேண்டும். உணவு கட்டுப்பாடு, புகைப்பிடித்தல் போன்ற செயல்களில், கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும்.


இன்று உலக இருதய தினம்!

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X