கூடலுார் : 'தேச விரோத சக்திகளுக்கும், வன்முறைக்கும், காங்., எப்போதும் துணை போகாது,'' என, காங்., மாநில தலைவர் அழகிரி கூறினார்.கூடலுாரில், நிருபர்களிடம் இவர் கூறியதாவது:
நீலகிரி மாவட்டம், கூடலுார் கோழிப்பாலத்தில் நாளை (இன்று) மாலை 4:00 மணிக்கு, ராகுல் நடைபயணம் துவக்குகிறார். தொடர்ந்து, நகரில் நடக்கும் கூட்டத்தில் பேசுகிறார். பி.எப்.ஐ., அமைப்பு மீது என்.ஐ.ஏ., மீண்டும் நடவடிக்கை எடுத்துள்ளது. அவர்களுக்கு எதிரான காரணங்களை பா.ஜ., அரசு வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும். காங்., எப்போதும் தேச விரோத சக்திகளுக்கும், வன்முறைக்கும் துணை போகாது.இவ்வாறு, அழகிரி கூறினார்.