என்.ஆர்.காங்., - பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள் சமரசம்: இணைந்து செயல்பட சபாநாயகர் அறிவுறுத்தல் | Dinamalar

என்.ஆர்.காங்., - பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள் சமரசம்: இணைந்து செயல்பட சபாநாயகர் அறிவுறுத்தல்

Updated : செப் 29, 2022 | Added : செப் 29, 2022 | கருத்துகள் (5) | |
புதுச்சேரி: அரசின் திட்டங்களை சில அதிகாரிகள் செயல்படுத்தாமல் உள்ளதற்கு முதல்வர் பொறுப்பேற்க முடியாது என சபாநாயகர் செல்வம் கூறினார்.புதுச்சேரியில் முதல்வர் ரங்கசாமி தலைமையில் என்.ஆர்.காங்., - பா.ஜ., கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த ஆட்சியில் பா.ஜ., மற்றும் ் ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் தங்கள் தொகுதிகள் புறக்கணிக்கப்படுவதாக கூறி அதிருப்தியில் இருந்தனர்.இந்நிலையில்,

புதுச்சேரி: அரசின் திட்டங்களை சில அதிகாரிகள் செயல்படுத்தாமல் உள்ளதற்கு முதல்வர் பொறுப்பேற்க முடியாது என சபாநாயகர் செல்வம் கூறினார்.

புதுச்சேரியில் முதல்வர் ரங்கசாமி தலைமையில் என்.ஆர்.காங்., - பா.ஜ., கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த ஆட்சியில் பா.ஜ., மற்றும் ் ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் தங்கள் தொகுதிகள் புறக்கணிக்கப்படுவதாக கூறி அதிருப்தியில் இருந்தனர்.இந்நிலையில், பா.ஜ., ஆதரவு சுயேச்சை எம்.எல்.ஏ., அங்காளன், தனது தொகுதியில் வளர்ச்சி பணி மேற்கொள்ளக்கூடாது என அதிகாரிகளுக்கு முதல்வர் வாய்மொழி உத்தரவிட்டுள்ளதாக கூறி, முதல்வர் பதவி விலக வலியுறுத்தி சட்டசபையில் உண்ணாவிரதம் இருந்தார். இவரது போராட்டத்திற்கு பா.ஜ., எம்.எல்.ஏ., கல்யாணசுந்தரம் ஆதரவு தெரிவித்தார்.latest tamil newsஇதனைக் கண்டித்தும், அங்காளன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டி, அமைச்சர் லட்சுமிநாராயணன் தலைமையில் என்.ஆர்.காங்., எம்.எல்.ஏ.,க்கள் முதல்வரை சந்தித்து முறையிட்டனர்.


சபாநாயகருடன் சந்திப்பு


இந்நிலையில், நேற்று பகல் 12 மணிக்கு அரசு கொறடா ஆறுமுகம் தலைமையில் என்.ஆர்.காங்., எம்.எல்.ஏ.,க்கள் ரமேஷ், தட்சணாமூர்த்தி, லட்சுமிகாந்தன், திருமுருகன் ஆகியோர் சட்டசபையில் சபாநாயகர் செல்வம், பா.ஜ.,வை சேர்ந்த உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோரை சந்தித்து பேசி, கூட்டணியில் இருந்து கொண்டு முதல்வரை விமர்சித்த அங்காளன் மீதும், அவரது போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த பா.ஜ., எம்.எல்.ஏ., கல்யாணசுந்தரம் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர். அப்போது அங்கு அமைச்சர்கள் லட்சுமிநாராயணன், தேனீ ஜெயக்குமார், சாய் சரவணன்குமார் ஆகியோர் இருந்தனர்.


பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள் புகார்


பின்னர், பகல் 1:15 மணிக்கு பா.ஜ.,எம்.எல்.ஏ.,க்கள் கல்யாணசுந்தரம், ஜான்குமார், ரிச்சர்டு, அசோக்பாபு, பா.ஜ., ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் சிவசங்கர், அங்காளன், கொல்லப்பள்ளி சீனுவாச அசோக் ஆகியோர் சபாநாயகர் மற்றும் உள்துறை அமைச்சரை சந்தித்து, வாரியத் தலைவர் பதவி வழங்காதது, தங்கள் தொகுதி புறக்கணிக்கப்படுவதாக குற்றம் சாட்டினர்.


latest tamil newsஇரு தரப்பு எம்.எல்.ஏ.,க்களிடம் நடந்த பேச்சுவார்த்தை குறித்து சபாநாயகர் செல்வம் கூறியதாவது:
என்.ஆர். காங்., எம்.எல்.ஏ.,க்கள் நேரம் கேட்டு சந்தித்தனர். அப்போது அமைச்சர்கள் நமச்சிவாயம், லட்சுமிநாராயணன், தேனீ ஜெயக்குமார், சாய் சரவணன்குமார் ஆகியோர் இருந்தனர். அங்காளன் எம்.எல்.ஏ., உண்ணாவிரதம் இருந்தபோது நடந்த சில கசப்பான சம்பவங்கள் குறித்து கேட்டனர்.

அதற்கு விளக்கம் அளித்த அமைச்சர் நமச்சிவாயம், கூட்டணியில் குழப்பம் ஏற்படுத்த வேண்டாம் என அறிவுறுத்தினார்.அதனைத் தொடர்ந்து அமைச்சர்கள் நமச்சிவாயம், லட்சுமிநாராயணன் ஆகியோர், கூட்டணியில் ஏற்பட்ட சிறு கசப்பான சம்பவங்களை மறந்து, மக்களுக்கு ேசவை செய்திட இந்த அரசு நீடிக்க வேண்டும், கூட்டணியில் எவ்வித குழப்பமும் இல்லை என்றனர். இருதரப்பு எம்.எல்.ஏ.,க்களும் கடந்தகால கசப்பான சம்பவங்களை மறந்து செயல்பட அறிவுறித்தினார். அதனையேற்று இரு தரப்பு எம்.எல்.ஏ.,க்களும் சமாதானமடைந்து கலைந்து சென்றனர்.


latest tamil news
முதல்வர் பொறுப்பல்ல


பா.ஜ., மற்றும் என்.ஆர்., காங்., தொகுதிகளிலும் சில பிரச்னைகள் உள்ளன. எம்.எல்.ஏ.,க்களின் உரிமைகளைப் பெற்றுத்தர முதல்வர் உள்ளார். அரசின் திட்டங்களை சில அதிகாரிகள் செயல்படுத்தாமல் உள்ளதால் இந்த குழப்பம் ஏற்படுகிறது. அதற்கு முதல்வர் பொறுப்பேற்க முடியாது. குழப்பத்தை ஏற்படுத்திய நிதித்துறை செயலர் மாற்றப்பட்டுள்ளார். செயல்படாத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

முதல்வரின் கோரிக்கையை ஏற்று, மத்திய துணைச் செயலர் ராஜிவ்ரஞ்சன் தலைமையில் மத்திய அரசு அனைத்துதுறை செயலர்களின் ஆய்வுக் கூட்டம் நடந்துள்ளது. அதனால், மாநிலத்தில் நிலவும் பல பிரச்னைகளை தீர்த்து விரைவில் மக்களுக்கு சிறப்பான ஆட்சியை தருவோம்.

எம்.எல்.ஏ.,க்களின் தவறை சுட்டிக் காட்டி எச்சரித்துள்ளோம். மேலும், எம்.எல்.ஏ.,க்கள் தொகுதி பிரச்னையை மட்டும் பேசவும், பிற பிரச்னை என்றால், அந்தந்த கட்சிகளின் சட்டசபை தலைவர்களிடம் தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இவ்வாறு சபாநாயகர் செல்வம் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X