சிறப்பு பகுதிகள்

அறிவியல் மலர்

கண்ணாடி முன்னாடி மிதக்கும் திரை!

Added : செப் 29, 2022 | |
Advertisement
கூகுள் தன் கண்ணாடிக் கடையை மூடி 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. இருந்தாலும் அவ்வப்போது, தொலைக்காட்சி, மடிக்கணினி போன்றவற்றின் திரைகளுக்கு மாற்றாக கண்ணாடியையே திரையாக மாற்றும் தொழில்நுட்பங்கள், அவ்வப்போது, மூடிய கதவைத் திறந்து வந்துகொண்டே இருக்கின்றன. பீஜிங்கிலிருந்து செயல்படும் 'என்ரியல்,' தன் 'ஆக்மென்டெட் ரியாலிட்டி' எனப்படும், 'மேம்பட்ட மெய்நிகர்'
science, Floating screen, glass, கண்ணாடி, மிதக்கும் திரை

கூகுள் தன் கண்ணாடிக் கடையை மூடி 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. இருந்தாலும் அவ்வப்போது, தொலைக்காட்சி, மடிக்கணினி போன்றவற்றின் திரைகளுக்கு மாற்றாக கண்ணாடியையே திரையாக மாற்றும் தொழில்நுட்பங்கள், அவ்வப்போது, மூடிய கதவைத் திறந்து வந்துகொண்டே இருக்கின்றன.

பீஜிங்கிலிருந்து செயல்படும் 'என்ரியல்,' தன் 'ஆக்மென்டெட் ரியாலிட்டி' எனப்படும், 'மேம்பட்ட மெய்நிகர்' தொழில்நுட்பத்தை அண்மையில் அமெரிக்காவில் வெளியிட்டது. இதை ஒரு மொபைல் அல்லது மடிக்கணினியுடன் இணைத்துக்கொண்டால், அதிலிருந்து, 'நெட்பிளிக்ஸ் முதல் கேம்ஸ் வரை சகலத்தையும், 'என்ரியல்' கண் கண்ணாடி வழியே கண்டு களிக்கலாம்.பத்து அடி தொலைவில், 130 அங்குல தொலைக்காட்சி திரையில் படங்களைப் பார்ப்பது போன்ற உணர்வை, என்ரியல் கண்ணாடி மூலம் பார்ப்பவருக்குத் தரும். இணையத்தில் வெளியிடப்படும் படங்கள், வெப்சீரிஸ் போன்றவற்றின் ரசிகர்களை குறிவைத்து இந்த கண்ணாடிகள் வெளியிடப்படுகின்றன.இதனாலேயே, 380 டாலருக்கு விற்கும் இவற்றை வாங்குவதற்கும் ஒரு கூட்டம் இருக்கத்தான் செய்கிறது. எக்ஸ்பாக்ஸ் போன்ற கேம் பித்தர்களுக்கு 200 அங்குலத் திரை தங்கள் கண் முன்னே மிதப்பது போன்ற பிரமையை ஏற்படுத்தும் கண்ணாடிகளையும் என்ரியல் விற்பனை செய்கிறது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X