சிறப்பு பகுதிகள்

அறிவியல் மலர்

வீடு கட்டும் 'ட்ரோன்'கள்!

Added : செப் 29, 2022 | கருத்துகள் (1) | |
Advertisement
கட்டடம் கட்ட முப்பரிமாண அச்சு இயந்திரத்தை பயன்படுத்துகின்றனர். அவை கட்டடம் கட்டுவதை படம் பிடிக்க 'ட்ரோன்' கேமராக்கள் பயன்படுகின்றன. ஏன் இந்த இரண்டையும் இணைக்கக் கூடாது என்று சிந்தித்தனர் பிரிட்டனிலுள்ள லண்டன் கல்லுாரி மற்றும் சுவிட்சர்லாந்திலுள்ள எம்ப்பா இன்ஸ்டிடியூட் ஆகியவற்றின் விஞ்ஞானிகள்.உடனே பிறந்தது, 'ஏரியல் அடிடிவ் மேனுபேக்சரிங்' எனப்படும், வான்
science, House, drones, வீடு, ட்ரோன்

கட்டடம் கட்ட முப்பரிமாண அச்சு இயந்திரத்தை பயன்படுத்துகின்றனர். அவை கட்டடம் கட்டுவதை படம் பிடிக்க 'ட்ரோன்' கேமராக்கள் பயன்படுகின்றன.

ஏன் இந்த இரண்டையும் இணைக்கக் கூடாது என்று சிந்தித்தனர் பிரிட்டனிலுள்ள லண்டன் கல்லுாரி மற்றும் சுவிட்சர்லாந்திலுள்ள எம்ப்பா இன்ஸ்டிடியூட் ஆகியவற்றின் விஞ்ஞானிகள்.உடனே பிறந்தது, 'ஏரியல் அடிடிவ் மேனுபேக்சரிங்' எனப்படும், வான் கூட்டு உற்பத்தி இயந்திரம். ஆம், இந்த இயந்திரம், ஒரு ட்ரோனுடன் காரைக் கலவைக் குழாயை பொருத்தி, அதை முன்னும் பின்னும் பறக்கவிட்டு கட்டடத்தை கட்டுகிறது.

இந்த ட்ரோனுக்கு கட்டுமான ட்ரோன் என்று பெயர். இது எப்படி கட்டுகிறது என்பதை அருகில் பறந்தபடி பார்த்து வழிகாட்டும் 'மேஸ்திரி ட்ரோன்' ஒன்றையும் விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். இந்த 'ஸ்கேன் ட்ரோன்' புளூபிரின்டிலிருந்து கட்டுமானம் மாறினால், உடனே கட்டுமான ட்ரோனுக்கு தகவலை பரிமாறி திருத்துகிறது.

கிரேன்கள், சாரங்களை வைத்துக் கட்டுவதை தவிர்க்க பறக்கும் ட்ரோன்கள் உதவும். குழவியும் பறவைகளும் இப்படி பறந்து பறந்து தானே தங்கள் கூடுகளை அமைத்துக்கொள்கின்றன?

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா
30-செப்-202203:56:57 IST Report Abuse
NicoleThomson அருமையான முயற்சி வாழ்த்துக்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X