சிறப்பு பகுதிகள்

அறிவியல் மலர்

'கின்னஸ்' சாதனைபடைத்த 'ரோபோ'

Added : செப் 29, 2022 | |
Advertisement
இரண்டு கால் 'ரோபோ'க்களுக்கு விரைவில் வீட்டிலும், தொழிற்சாலைகளிலும், டெலிவரி சேவைகளிலும் நல்ல மவுசு வரப்போகிறது. அப்படித் தான் சொல்கின்றனர். அமெரிக்காவிலுள்ள அஜிலிட்டி ரோபோடிக்ஸ் நிறுவனத்தார். அவர்கள் தயாரித்துள்ள ரோபோவான 'கேஸி', இடுப்பு வரை மட்டுமே உள்ளது. இருந்தாலும் இரண்டு கால்களை வைத்து அது நடக்கும் நடையை நாள் முழுதும் பார்த்துக் கொண்டிருக்கலாம். அதன்
Guinness Record, cassie robot, கின்னஸ் சாதனை, கேஸி ரோபோ, அஜிலிட்டி ரோபோடிக்ஸ், Agility Robotics, Robot,ரோபோ,

இரண்டு கால் 'ரோபோ'க்களுக்கு விரைவில் வீட்டிலும், தொழிற்சாலைகளிலும், டெலிவரி சேவைகளிலும் நல்ல மவுசு வரப்போகிறது. அப்படித் தான் சொல்கின்றனர். அமெரிக்காவிலுள்ள அஜிலிட்டி ரோபோடிக்ஸ் நிறுவனத்தார்.

அவர்கள் தயாரித்துள்ள ரோபோவான 'கேஸி', இடுப்பு வரை மட்டுமே உள்ளது. இருந்தாலும் இரண்டு கால்களை வைத்து அது நடக்கும் நடையை நாள் முழுதும் பார்த்துக் கொண்டிருக்கலாம். அதன் கால்களின் வடிவமைப்பையும், மென்பொருளையும் மெருகேற்றி, 100 மீட்டர் பந்தயத்தில் ஓடவிட்டனர்.

அதில் தான் கேஸி, 24.73 விநாடிகளில் ஓடி சாதித்து, கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்திருக்கிறது. மனித வீரர்கள், 100 மீட்டரை 10 வினாடிகளுக்குள் ஓடுவர். இந்த நிலையில், ஒரு ரோபோ 24 வினாடிகள் எடுத்தால் அது மெதுவானதாக ஆகாதா? அடுத்தடுத்த ஆண்டுகளில் கேஸி ரோபோவின் ஓட்டத்திறன் அதிகரித்து, மனிதர்களை விட வேகமாக கேஸியால் ஓட முடியும் என்கின்றனர், இதன் படைப்பாளிகள்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X