பிரச்னைக்கு தீர்வில்லை
வால்பாறை அடுத்துள்ள, சிறுகுன்றா எஸ்டேட் பகுதியில் உள்ள மின் கம்பம், பழுதடைந்து சாய்ந்து விழும் நிலையில் உள்ளது. புதிய கம்பம் பொருத்த வலியுறுத்தி பலமுறை புகாரளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.- மகேஷ், சிறுகுன்றா.
ஒளிராத தெருவிளக்குகள்
வால்பாறை கோ -- ஆப்ரேட்டிவ் காலனியில் பெரும்பாலான தெருவிளக்குகள் இரவு நேரத்தில் ஒளிருவதில்லை. இதனால், மக்கள் இரவு நேரத்தில் அவதிப்படுகின்றனர். நகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.- மாயா, வால்பாறை.
மருத்துவ உதவி கிடைக்கல
பொள்ளாச்சி, கொங்கலப்பம்பாளையம் பகுதியில், மக்களைத்தேடி மருத்துவம் திட்டம் முறையாக செயல்படுத்தப்படாமல் உள்ளதால், மக்கள் கடுமையாக பாதிக்கின்றனர். மக்களைத்தேடி மருத்துவம் திட்டத்தை முறையாக செயல்படுத்த வேண்டும்.- பாலசுப்ரமணியம்,
கொங்கலப்பம்பாளையம்.
சுத்தம் செய்யணும்!
பொள்ளாச்சி, அண்ணா அவென்யூ, 9வது வார்டு பகுதியில், பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட, மண், கற்கள் ரோட்டிலேயே குவிக்கப்பட்டுள்ளது. இதனால், வாகனங்கள் செல்ல இடையூறு ஏற்படுகிறது. கழிவை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.- மாணிக்கம், பொள்ளாச்சி.
சிதிலமடைந்த ரோடு
பொள்ளாச்சி, சோமந்துறைசித்துார் - ஆனைமலை ரோட்டில், பெத்தநாயக்கனுார் பிரிவு அருகே, ரோடு சிதிலமடைந்து குண்டும் குழியுமாக உள்ளதால், வாகன ஓட்டுனர்கள் விபத்துக்கு உள்ளாகின்றனர். ரோட்டிலுள்ள குழியை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.- கதிர்வேல், சோமந்துறை.
ஆக்கிரமிப்பு அதிகம்
வால்பாறை புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள பாலத்தை ஆக்கிரமித்து வாகனங்கள் நிறுத்தப்படுவதால், அடிக்கடி போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. ஆக்கிரமித்து வாகனங்கள் நிறுத்துவோருக்கு அபராதம் விதித்து, அத்துமீறலை கட்டுப்படுத்த போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.- நவீன், வால்பாறை.
நிழற்கூரை வேண்டும்
ஆனைமலை மாசாணியம்மன் கோவில் அருகே, நிழற்கூரை கட்டப்படாமல் உள்ளதால், பக்தர்கள் வெயில், மழையில், கடும் சிரமத்துக்கு இடையே பஸ் வசதி பெறுகின்றனர். அங்கு நிழற்கூரை கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.- நிர்மல், ஆனைமலை.
புதர் அகற்ற வேண்டும்
பொள்ளாச்சி - பல்லடம் ரோடு, பி.கே.ஆர்., லே - அவுட் பகுதியில், புதர் சூழந்துள்ளதால், பாம்பு, தேள் உள்ளிட்ட விஷப்பூச்சிகள் குடியிருப்பு பகுதியில் சுற்றுகின்றன. இதனால், மக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது. புதர் அகற்றி சுத்தம் செய்ய வேண்டும்.- முகேஸ், பொள்ளாச்சி.