பொள்ளாச்சி : ''அப்பா...' தினமலர் ஸ்மார்ட் ஷாப்பர்ஸ்' கண்காட்சியில, நிறைய 'கேம்ஸ்' இருக்குமுனு ஸ்கூல்ல ப்ரண்ட்ஸ் எல்லாரும் சொன்னாங்க. லீவு நாள்ல, கண்காட்சிக்கு கூட்டீட்டு போங்கப்பா, ஜாலியா இருக்கும்...'' என, குட்டீஸ் உங்கள நச்சரிக்க துவங்கியிருப்பாங்க.
கொரோனா தொற்று பரவலுக்கு அப்புறம், குழந்தைகளுக்கு மன அழுத்தம் அதிகமாயிருக்குனு உலக சுகாதார நிறுவனம் சொல்லியிருக்கு. இந்தாண்டு பள்ளிக்கூடம் திறப்புக்கு பிறகும், குழந்தைகள் மனசு இன்னும் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை என்பதே நிதர்சனம். இந்த நேரத்துல, கிடைக்கும் குறைந்த லீவு நாட்களில், குடும்பத்தோடு வெளியூர்களுக்கு சென்று வர உங்களுக்கு நேரம் இருக்காதுனு தெரியும்.
மக்களோட இந்த பிரச்னையை தீர்க்கறதுக்காகத்தான், 'தினமலர் ஸ்மார்ட் ஷாப்பர்ஸ்' கண்காட்சி நடகுது.பொள்ளாச்சி, உடுமலை மக்களோட விருப்ப தேடலுக்கு, விருந்து படைப்பதற்காகவே, 'தினமலர்' சார்பில் 'ஸ்மார்ட் ஷாப்பர்ஸ் எக்ஸ்போ 2022' மாபெரும் வீட்டு உபயோகப் பொருட்களின் நுகர்வோர் கண்காட்சி நடக்கிறது.
பொள்ளாச்சி - கோவை ரோட்டிலுள்ள, ஸ்ரீ கந்த மஹாலில், நடக்கும் இந்த கண்காட்சியில், கலர்புல்லான, கலக்கலான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.சர்வதேச அளவிலான தயாரிப்பு நிறுவனங்கள், இந்தியாவின் பிரபலமான நிறுவனங்கள் சார்பில், நேரடியாக அரங்கங்கள் அமைக்கவுள்ளன.வெளிநாட்டு, வெளிமாநிலங்களைச் சேர்ந்த உற்பத்தியாளர்கள், கைவினைக் கலைஞர்கள் பலரும் கண்காட்சியில் தங்கள் பொருட்களை அதிரடி சலுகை விலைகளில் விற்பனை செய்யவுள்ளனர்.
கண்காட்சியில், 70க்கும் மேற்பட்ட ஸ்டால்களுடன், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, எல்லா வயதினரையும் குஷிப்படுத்தும், மேஜிக் ஷோ, ஜக்லர்ஸ் ஷோ, ஒட்டக சவாரி, குட்டீஸ்களை குஷிப்படுத்தும் வாட்டர் போட், ஜிக்குபுக்கு ரயிலு, என, ஏராளமான விளையாட்டுகள், பல விதமான பொழுது போக்கு அம்சங்களும் இடம் பெறுகின்றன.உணவுப் பிரியர்களை உற்சாகப்படுத்தும் வகையில், பல்வேறு மாநிலங்களின் ஸ்பெஷல்களை கொண்ட ஸ்டால்களுடன், சைவ, அசைவ உணவுத் திருவிழாவும் இந்த கண்காட்சியில் நடத்தப்படவுள்ளது.
கண்காட்சிக்குப் போனால், கலர்புல்லாக 'ஷாப்பிங்' செய்வதுடன், கலகலப்பாக பொழுதையும் கழித்து வரலாம் என்பதற்கு 'கியாரண்டி' அளிக்கும் வகையில், வெகு சிறப்பாக நிகழவுள்ளது.கண்காட்சி, வரும் 30ம் தேதியில் இருந்து, அக்., 2ம் தேதி வரை மூன்று நாட்களுக்கு நடக்கவுள்ளது. காலை 10:00 மணியிலிருந்து இரவு 8:00 மணி வரை, பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவர். 6 வயதுக்கு மேற்பட்டோருக்கு, 40 ரூபாய் நுழைவுக்கட்டணம்.
தீபாவளி பண்டிகையும் நெருங்கி வருகிறது. இந்த வருஷம் தீபாவளிக்கு, வீட்டுக்கு தேவையான பொருட்கள் வாங்கணும், குட்டீஸ்களை குஷிபடுத்தணும் என, ஏகப்பட்ட கனவுகளோடு பட்ஜெட் போட்டிருப்பீங்க.
உங்க பட்ஜெட் கனவை, இந்த நுகர்வோர் கண்காட்சி நிச்சயம் நனவாக்கும்.விடுமுறை நாட்களில் குதுாகலத்துக்கும், கொண்டாட்டத்துக்கும் தயாராகுங்கள்... பொள்ளாச்சி, உடுமலை மக்களே!