பாலாற்றின் குறுக்கே அனுமதியின்றி இரண்டு புதிய நீர்த்தேக்கங்களை கட்ட நடவடிக்கை எடுக்கவிருக்கும் ஆந்திர அரசின் செயல்பாட்டினை உடனடியாக தடுத்து நிறுத்தி, கனகநாச்சியம்மன் கோயில் அருகே இருக்கும் நீர்த்தேக்கத்தில் தண்ணீர் சேமிக்கும் அளவை அதிகரிக்க உரிய நடவடிக்கைகளை எடுத்திடுக. - பன்னீர்செல்வம், தமிழக முன்னாள் முதல்வர்.
தஞ்சாவூர் உட்பட காவிரி பாசன மாவட்டங்களில் சில நாட்களாக பெய்து வரும் மழையால், கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டு வரப்பட்டிருந்த நெல் மூடைகள் மழையில் நனைந்து சேதமடைந்திருக்கின்றன. ஏராளமான விவசாயிகள் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.- ராமதாஸ், பா.ம.க., நிறுவனர்
கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் குடும்பத்துடன் அரசு மருத்துவர்கள் உண்ணாவிரதம் மேற்கொள்ள இருக்கிறார்கள். இந்த போராட்டத்துக்கு முன்னதாகவே அரசு மருத்துவர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற முதல்வர் ஸ்டாலின் முன்வர வேண்டும்.- விஜயகாந்த், தே.மு.தி.க., தலைவர்
பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு தடுப்பணை கட்ட கூடாது. பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட ஆந்திர அரசின் முடிவை உடனடியாக கைவிட வேண்டும்.- வாசன், த.மா.கா., தலைவர்
விவசாயிகளிடமிருந்து நேரடி கொள்முதல் நிலையம் மூலம் வாங்கப்படும் நெல்லின் ஈரப்பதம் 16 சதவீதம் இருக்க வேண்டும் என தமிழக அரசு விவசாயிகளை நிர்பந்திப்பது கண்டனத்திற்குரியது. தற்போதைய மழையினால் நெல்லின் ஈரப்பதம் 20 - 25சதவீதம் உள்ளது. இத்தகைய இயற்கை பாதிப்புகளின்போது, ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் 21 சதவீதம் வரை ஈரப்பதமுள்ள நெல் கொள்முதல் செய்யப்பட்டது.- தினகரன், அ.ம.மு.க., பொதுச்செயலர்
இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் வணிகத் தொடர்பாளர்களை தனியார் துறை ஊழியர்களாக மாற்ற திட்டம். வங்கி நிர்வாகத்தின் நடவடிக்கை சர்வாதிகாரத்தின் உச்சம். மத்திய அரசின் பொதுத்துறை வங்கிகளின் வளர்ச்சியிலும் மக்கள் சேவையிலும் வணிகத் தொடர்பாளர்களின் பங்கு இன்றியமையாதது.- வேல்முருகன், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர்
மோடி ஆட்சியில் தொடரும் சீரழிவு. வரலாறு காணாத நெருக்கடியில் இந்திய பொருளாதாரம். இந்திய ரூபாயின் மதிப்பு உயரும். பெட்ரோல் விலை குறையும். ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்பு அதிகரிக்கும் என்றெல்லாம் வாய்ச்சவடால் அடித்த ஆட்சிக்கு வந்தது மோடி அரசு. இப்போதைய நிலை என்ன?- பாலகிருஷ்ணன், மார்க்சிஸ்ட் மாநில செயலர்.