வேறு வீட்டு மருமகள் பிரியங்கா கட்சி தலைவராகலாம்: காங்., எம்.பி., கண்டுபிடிப்பு

Updated : செப் 29, 2022 | Added : செப் 29, 2022 | கருத்துகள் (19) | |
Advertisement
புதுடில்லி: காங்., தலைவர் சோனியாவின் மகள் பிரியங்கா திருமணத்திற்கு பிறகு வாத்ரா குடும்ப மருமகளாகிவிட்டார். இந்திய மரபுப்படி இனிமேல் சோனியா குடும்பத்தை சேராதவர் என்பதால் அவரை தலைவராக்கலாம் என அக்கட்சி எம்.பி., அப்துல் கலிக் கூறியுள்ளார்.காங்கிரஸ் இடைக்கால தலைவராக சோனியா உள்ளார். புதிய தலைவரை தேர்வு செய்ய வரும் 17 ல் தேர்தல் நடைபெற உள்ளது. அதில், மீண்டும் போட்டியிட
காங்கிரஸ், பிரியங்கா,ராகுல் காந்தி, priyankagandhi, AbdulKhaleque, rahul gandhi, CongressPresidentPolls, priyanka,  priyankavadra, incindia,  rahul,   பிரியங்கா காந்தி, பிரியங்கா வாத்ரா, ராகுல்,  காங்கிரஸ் தலைவர்,  அப்துல் காலிக்,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி: காங்., தலைவர் சோனியாவின் மகள் பிரியங்கா திருமணத்திற்கு பிறகு வாத்ரா குடும்ப மருமகளாகிவிட்டார். இந்திய மரபுப்படி இனிமேல் சோனியா குடும்பத்தை சேராதவர் என்பதால் அவரை தலைவராக்கலாம் என அக்கட்சி எம்.பி., அப்துல் கலிக் கூறியுள்ளார்.



காங்கிரஸ் இடைக்கால தலைவராக சோனியா உள்ளார். புதிய தலைவரை தேர்வு செய்ய வரும் 17 ல் தேர்தல் நடைபெற உள்ளது. அதில், மீண்டும் போட்டியிட மறுத்துவிட்ட ராகுல், தனது குடும்பத்தை சேர்ந்த யாரும் தலைவர் பதவிக்கு போட்டியிட மாட்டார்கள் என தெரிவித்துள்ளார். அவரை சமாதானப்படுத்த கட்சி மூத்த தலைவர்கள் பலரும் எடுத்த முயற்சிகள் தோல்வியில் முடிந்தன.



latest tamil news



இதனையடுத்து, திக்விஜய் சிங், மல்லிகார்ஜூனா கார்கே, வேணுகோபால் உள்ளிட்டவர்களின் பெயர்கள் பரிசீலனையில் உள்ளன. சசி தரூர் களமிறங்குவது உறுதியாக உள்ளது.



latest tamil news


இந்நிலையில், அசாம் மாநிலம் பார்பேடா தொகுதியின் காங்கிரஸ் எம்.பி., அப்துல் காலிக் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: காங்கிரஸ் தலைவராக மீண்டும் பொறுப்பேற்க ராகுல் மறுத்து வருவதால், அந்த பதவிக்கு பிரியங்கா பொருத்தமானவராக இருப்பார் என நான் கருதுகிறேன். தற்போது அவர் வாத்ரா குடும்பத்தின் மருமகளாகி விட்டதால், இந்திய திருமண மரபுப்படி இனியும் அவர் சோனியா குடும்பத்தில் இடம்பெற மாட்டார். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
29-செப்-202222:19:15 IST Report Abuse
Ramesh Sargam காங்கிரஸ் கட்சியின் பதவிக்கே இவர்கள் இப்படி போட்டாபோட்டி போடுகிறார்கள். நாளை, ஒருவேளை, காங்கிரஸ் தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சிக்கு வருமானால் (அப்படி நடக்க வாய்ப்பே இல்லை) அந்த பிரதமர் பதவிக்கு அவர்களிடையே எப்படி போட்டாபோட்டி ஏட்படும்? நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை.
Rate this:
Deiva Prakash - Coimbatore,இந்தியா
30-செப்-202200:14:03 IST Report Abuse
Deiva Prakashஆமா, மாநில தலைவர் அண்ணாமலை KT ராகவனை ஓரம் கட்டினதை பாத்த பிறகும் காங்கிரஸில் மட்டும்தான் போட்டாபோட்டின்னு தெரியுதாக்கும் உங்களுக்கு. கண்ணாடியை மாத்தணும் போல...
Rate this:
Cancel
29-செப்-202222:18:08 IST Report Abuse
அதிசயம் எல்லா காங்.காரனுக்கும் தெரிந்திருக்கு அவனுகளுக்கு தகுதி இல்லைன்னு.... அருமை...
Rate this:
Cancel
29-செப்-202222:15:38 IST Report Abuse
சிந்தனை அதுசரி, இந்திரா எப்படி...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X