சென்னிமலை டவுன், காமராஜர் நகரில் உள்ள சமுதாய நலக்கூடத்தில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, ஒருங்கிணைந்த குழந்தை
வளர்ச்சி பணிகள் திட்டம் சார்பில், ஈரோடு எம்.பி., கணேசமூர்த்தி முன்னிலையில், செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன், 62 கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடத்தி, சீர்வரிசை பொருட்கள் மற்றும் தனது சொந்த நிதியிலிருந்து தலா, 1,000 ரூபாய் மற்றும் வேட்டி, சேலைகளை வழங்கினார். மேலும், 62 கர்ப்பிணிகளுக்கு ஐந்து வகை உணவுகளும் சீர்வரிசைபொருட்களும் வழங்கப்பட்டன.
தொடர்ந்து, சென்னிமலை சென்குமார் தொடக்க கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத்தில், செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் ஆய்வு மேற்கொண்டார்.
மாவட்ட ஊராட்சி உறுப்பினர் செல்வம், சென்னிமலை பேரூராட்சி தலைவர் ஸ்ரீதேவி, சென்னிமலை யூனியன் தலைவர் காயத்திரி, கைத்தறி துறை உதவி இயக்குனர் சரவணன், மேலாண்மை இயக்குனர் தமிழ்செல்வன் உட்பட பலர் பங்கேற்றனர்.