சேலம், அரிசிபாளையத்தை சேர்ந்த விஜயகுமார் மனைவி மகாலட்சுமி, 45. இவர், 10 ஆண்டுக்கு மேலாக மகளிர் சுய உதவிக்குழு நடத்தி பலரிடம் மாதந்தோறும் பணம் பெற்றுள்ளார். மாத, வார சீட்டும் நடத்தி வந்தார். ஆனால் மகாலட்சுமி பணத்தை திருப்பி கொடுக்காமல் இழுத்தடித்து வந்தார்.
இந்நிலையில், 2 மாதத்துக்கு முன் கணவர் விஜயகுமார் இறந்துவிட்டார். இதனால் பணம் கேட்காமல் இருந்த பெண்கள், கடந்த வாரம் கேட்ட நிலையில், அவர் இரவோடு இரவாக வீட்டை காலி செய்து விட்டு துறையூர் சென்றார்.
அவரை தொடர்பு கொள்ள முடியாததால், நேற்று காலை, 10க்கும் மேற்பட்ட பெண்கள் மகாலட்சுமி மீது நட
வடிக்கை எடுக்க கோரி, சேலம் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தனர். மோசடி குறித்து விசாரிக்க, பள்ளப்பட்டி போலீசாருக்கு, துணை கமிஷனர் மாடசாமி உத்தரவிட்டுள்ளார்.