ம.பி.,யில் பழங்கால சிலைகள், கோவில்கள் கண்டுபிடிப்பு

Added : செப் 29, 2022 | |
Advertisement
போபால்: மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள புலிகள் சரணாலயத்தில் இந்திய தொல்லியல் துறையினர் நடத்திய ஆய்வில் பழங்கால கோவில்கள், சிலைகள், கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.ம.பி.,யின் பந்தவ்கார்க் புலிகள் சரணாலயத்தில் 170 சதுர கி.மீ., பகுதியை இந்திய தொல்லியல் துறை அதிகாரிகள் குழுவினர் கடந்த மே 20 முதல் ஜூன் 27 வரை தீவிரமாக ஆய்வு செய்தது. அதில், 26 கோவில்கள், 26 குகைகள், 2
Ancient Caves, Temples, Madhya Pradesh, Tiger Reserve,மபி, சிலைகள், கோவில்கள்,

போபால்: மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள புலிகள் சரணாலயத்தில் இந்திய தொல்லியல் துறையினர் நடத்திய ஆய்வில் பழங்கால கோவில்கள், சிலைகள், கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.



ம.பி.,யின் பந்தவ்கார்க் புலிகள் சரணாலயத்தில் 170 சதுர கி.மீ., பகுதியை இந்திய தொல்லியல் துறை அதிகாரிகள் குழுவினர் கடந்த மே 20 முதல் ஜூன் 27 வரை தீவிரமாக ஆய்வு செய்தது. அதில், 26 கோவில்கள், 26 குகைகள், 2 கல்வெட்டுகள், 2 ஸ்தூபிகள், 2 மடங்கள், 46 சிற்பங்கள் மற்றும் 19 நீர்கட்டமைப்புகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.



இங்கு கண்டுபிடிக்கப்பட்டவை, அரசரகள் போதஸ்ரீ, பட்டதேவா, பீம்சேனா காலத்தை சேர்ந்தவை. கல்வெட்டுகளில் மதுரா, கவுசமி, பவடா, சப்தநாயரிகா மற்றும் வேஜபாரதா உள்ளிட்ட இடங்கள் பற்றிய குறிப்புகள் உள்ளன. கடவுள் விஷ்ணுவின் அவதாரங்களான வராஹா, மச்ச அவதாரங்களை குறிக்கும் வகையிலான சிற்பங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.



புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X