வாக்குறுதி பற்றி மாறி மாறி பேசும் திமுக: போட்டுத்தாக்கும் பழனிசாமி

Updated : செப் 29, 2022 | Added : செப் 29, 2022 | கருத்துகள் (12) | |
Advertisement
சிவகாசி: நீட் விலக்கு உள்ளிட்ட வாக்குறுதிகள் குறித்து திமுக.,வினர் மாறி மாறி பேசுவதாக அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் பழனிசாமி விமர்சித்துள்ளார்.சிவகாசியில் அருகே திருத்தங்கலில் அதிமுக பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் பழனிசாமி பங்கேற்று பேசியதாவது: 52 லட்சம் மாணவர்களுக்கு வழங்கிய லேப்டாப் திட்டத்தை திமுக அரசு நிறுத்தியது.
ADMK, Palanisamy, DMK, Slams, Sivakasi, EPS, Edappadi Palanisamy, அதிமுக, பழனிசாமி, திமுக, வாக்குறுதிகள், விமர்சனம், சிவகாசி, இபிஎஸ், எடப்பாடி பழனிசாமி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சிவகாசி: நீட் விலக்கு உள்ளிட்ட வாக்குறுதிகள் குறித்து திமுக.,வினர் மாறி மாறி பேசுவதாக அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் பழனிசாமி விமர்சித்துள்ளார்.சிவகாசியில் அருகே திருத்தங்கலில் அதிமுக பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் பழனிசாமி பங்கேற்று பேசியதாவது: 52 லட்சம் மாணவர்களுக்கு வழங்கிய லேப்டாப் திட்டத்தை திமுக அரசு நிறுத்தியது. அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களும் மருத்துவ படிப்புகளில் சேர வேண்டும் என்பதற்காக 7.5 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்கினோம்.ஆனால் நீட் விலக்கு உள்ளிட்ட வாக்குறுதிகள் குறித்து திமுக.,வினர் மாற்றி, மாற்றி பேசுகின்றனர். நாங்கள் கொண்டுவந்த திட்டங்கள், மருத்துவக் கல்லூரிகளுக்கு நீங்கள் ரிப்பன் வெட்டி துவங்கி வைக்கின்றனர்.நாங்கள் பெற்ற பிள்ளைக்கு வேறுயாரோ பெயர் வைப்பது வேதனையாக உள்ளது. ஸ்டாலின் இரட்டை வேடம் போடுகிறார், கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை காற்றில் பறக்கவிட்டுள்ளார். மக்களுக்காக நீங்கள் என்ன சாதனை செய்துள்ளீர்கள்? திராவிட மாடலை உருவாக்கியது அதிமுக தான். திராவிட மாடல் என சொல்வதற்கு ஸ்டாலின் என்ன செய்தார்? அம்மா கிளினிக்கை மூடினர். தற்போது அம்மா உணகத்தையும் மூட இந்த அரசு முயற்சித்து வருகிறது. பொங்கல் பண்டிகை வந்தாலே திமுக அரசு கொடுத்த பரிசு பொருட்கள் தான் நியாபகம் வருகிறது. ஏழை மக்களுக்கு கொடுக்கக்கூடிய பொருட்களில் கூட ஊழல் செய்துள்ளனர். அனைத்திலும் கமிஷன், கலெக்ஷன், கரெப்சன்.latest tamil news


பட்டாசு தொழிலாளர்களை பாதுகாக்க அதிமுக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. ஆனால் திமுக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. உயர்கல்வி அமைச்சர், பெண்கள் பஸ்சில் ஓசியில் செல்வதாக கூறுகிறார். அது மக்களின் வரிப்பணத்தில் இருந்துதான் கொடுக்கின்றனர். அதனை கொச்சைப்படுத்துகிறார்.இதற்கெல்லாம் லோக்சபா தேர்தலில் மக்கள் திமுக.,விற்கு பாடம் கொடுப்பார்கள். மக்கள் தான் எஜமானர்கள், நீதிபதிகள் என்பதை நினைவில் கொள்ளுங்கள். இவ்வாறு அவர் பேசினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Arachi - Chennai,இந்தியா
29-செப்-202220:20:43 IST Report Abuse
Arachi துரோகத்திற்கு என்று ஒரு சிலை வைத்தால் எடப்பாடிக்கு வைக்கலாம். பொய் சொல்வதற்கு பத்மஸ்ரீ பட்டம் அளித்தால் எடப்பாடிக்கு கொடுக்கலாம். இலக்கியம் திற்னாய்விற்கு பட்டம் கொடுத்தால் எடப்பாடிக்கு கொடுக்கலாம். ஆங்கிலப்புலமைக்கும் நோபல் பரிசு கொடுக்கலாம். அப்பாடி லாஸ் ஏஞ்சல்ஸ் என்று சொல்வதற்குள் பட்டப்பாடு அப்பப்பா இறால் மீன்போல் முதுகை வளைத்து தரைவரை வணங்கி தமிழனின் பண்பாட்டை கேவலப்படுத்துவதிலும் இவருக்கு சிறப்புப்பட்டம் கொடுக்கலாம். ஜெயலலிதா என்ற தன்மான தலைவி எங்கே இவர் எங்கே.நல்லவேளை அந்த அம்மா இல்லை .தமிழனின் தனித்தன்மையை கேவலப்ப்டுத்துறானுக பதவிக்காகவும் தன்னைக்காப்பற்றிக்கொள்ளவும்.தமிழன் எவருக்கும் இளைத்தவன் அல்ல.
Rate this:
Cancel
Vena Suna - Coimbatore,இந்தியா
29-செப்-202219:57:30 IST Report Abuse
Vena Suna அதிமுக பிடிக்கவில்லை என்று திமுகவிற்கு ஓட்டு போடுகிறோம். திமுக பிடிக்கவில்லை என்று அதிமுகவிற்கு ஓட்டு போடுகிறோம்,அதனால் மாறி மாறி வருகிறார்கள். கொள்ளை அடிக்கிறார்கள். இவர்களுக்கு உள்ளே adjustments வேறு செய்து கொள்கிறார்கள்.
Rate this:
John Miller - Hamilton,பெர்முடா
30-செப்-202201:48:44 IST Report Abuse
John Millerஇப்படி அட்ஜஸ்ட்மெண்ட்ஸ் பண்ணுகிறவர்களை ஏன் டெல்லிக்கு கூப்பிட்டு ஆசீர்வாதம் செய்து அனுப்புகிண்றீர்கள்....
Rate this:
Cancel
29-செப்-202219:16:39 IST Report Abuse
அப்புசாமி எதிர்க்கட்சியாக இருக்கும்போது இப்பிடி வேலை வெட்டி இல்லாமபோட்டுத் தாக்குவது சுலபம். தி.மு.க வும் இதைத்தான் செஞ்சுது. பா.ஜ வும் இப்பிடித்தான் செய்யுது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X