பஸ்சில் ஓசி வேண்டாம்: டிக்கெட் கேட்டு சண்டை போட்ட 'மானஸ்தி'

Updated : செப் 30, 2022 | Added : செப் 29, 2022 | கருத்துகள் (132) | |
Advertisement
கோவை:'நான் 'ஓசி'யில் பயணிக்க மாட்டேன். காசு வாங்கிட்டு டிக்கெட் கொடு' என்று, நடத்துனரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட கோவையைச் சேர்ந்த மூதாட்டியின் செயல், சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருவதுடன், பலரது பாராட்டையும் பெற்றுள்ளது.கோவை காந்திபுரத்தில் இருந்து, கண்ணம்மநாயக்கனுார் செல்லும் அரசு பஸ் நேற்று காலை சென்று கொண்டிருந்தது. அப்போது, குரும்பப்பாளையத்தைச் சேர்ந்த
மூதாட்டி, அரசு பஸ், இலவச பயணம், வாக்குவாதம்,  government bus, free bus, conductor, ticket, ticket fare,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

கோவை:'நான் 'ஓசி'யில் பயணிக்க மாட்டேன். காசு வாங்கிட்டு டிக்கெட் கொடு' என்று, நடத்துனரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட கோவையைச் சேர்ந்த மூதாட்டியின் செயல், சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருவதுடன், பலரது பாராட்டையும் பெற்றுள்ளது.


கோவை காந்திபுரத்தில் இருந்து, கண்ணம்மநாயக்கனுார் செல்லும் அரசு பஸ் நேற்று காலை சென்று கொண்டிருந்தது. அப்போது, குரும்பப்பாளையத்தைச் சேர்ந்த துளசியம்மாள், 70, பஸ்சில் ஏறினார்.நடத்துனர் வினித், துளசியம்மாளிடம் பயணச்சீட்டு கொடுக்க வந்த போது தான் துவங்கியது இந்த உரையாடல்.


நடத்துனர்: எங்கம்மா போகணும்?


துளசியம்மாள்: பாலத்துறை.


நடத்துனர்: இந்தாம்மா டிக்கெட்.


துளசியம்மாள்: காசு வாங்கிக்கோ.


நடத்துனர்: காசெல்லாம் இல்லம்மா... 'ப்ரீ' தான்.


துளசியம்மாள்: காசு வாங்கலேன்னா, டிக்கெட் வேண்டாம். நான் 'ஓசி'யில வர மாட்டேன்.


நடத்துனர்: காசு வாங்க மாட்டேன் நானு.


துளசியம்மாள்: தமிழ்நாடே 'ஓசி'யில போகுது... நான் வர மாட்டேன்.


நடத்துனர்: அட... ஏம்மா தொந்தரவு பண்றீங்க..


துளசியம்மாள்: எனக்கு, 'ப்ரீ' வேண்டாம்.


துளசியம்மாளின் பிடிவாதத்தால், நடத்துனர் பயணச்சீட்டுக்கு உரிய தொகையை பெற்று, மீதி சில்லரை கொடுத்தார்.latest tamil news


உரையாடலுக்கு இடையே, பயணியர் பலர் துளசியம்மாளிடம் டிக்கெட் 'ப்ரீ' தான் என்று சொன்ன போதும், அவர் ஓசி பயணம் செய்ய விருப்பம் தெரிவிக்காமல், பயணச்சீட்டு வாங்கியது தான் ஹைலைட். அமைச்சர் பொன்முடி சொன்ன 'ஓசி' என்ற அந்த வார்த்தை தான் துளசியம்மாளை உசுப்பி விட்டுள்ளது.


சமீபத்தில், ஒரு அரங்கில் அமர்ந்திருந்த பெண்கள் மத்தியில் பேசிய அமைச்சர் பொன்முடி, 'நீங்கெல்லாம் இப்போ பஸ்ல எப்படி போறீங்க... 'ஓசி'யில...' என்று ஏளனமாக பேசியது தான், பணம் கொடுத்து பயணச்சீட்டு பெறாமல் இனி பஸ்சில் பயணிக்கக் கூடாது என்ற துளசியம்மாளின் முடிவுக்கு காரணம்.பஸ்சில் இருந்து இதை வீடியோ எடுத்த ஒருவர், சமூகவலைதளத்தில் பதிவிட்டது தற்போது வேகமாக பரவி வருகிறது. துளசியம்மாளுக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.


பல பெண்களின் ஆதங்கமும் இது தான். 'நாங்களா கேட்டோம்; அரசாங்கம் தான் இலவசப் பயணம் கொடுத்தது. இதை அமைச்சர் எப்படி 'ஓசி' பயணம் என்று பேசுகிறார்; அதை ஏற்றுக் கொள்ள முடியாது' என்று கோபமாக கூறுகின்றனர்.துளசியம்மாளின் வழியை, இன்னும் எத்தனை பெண்கள் பின்பற்றப் போகின்றனர் என்பது போக போக தெரியும்.


இதற்கிடையே, தி.மு.க., அரசுக்கு களங்கம் ஏற்படுத்த இச்செயலை செய்ததாக, அ.தி.மு.க.,வின் தகவல் தொழில்நுட்ப பிரிவினர் மீது தி.மு.க.,வினர் புகார் தெரிவித்துள்ளனர்.துளசியம்மாளை துாண்டிவிட்டு, நடத்துனருடன் பிரச்னை செய்ய வைத்து, அதை வீடியோவாக பதிவிட்டு, சமூகவலைதளங்களில் பரப்புவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (132)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RADE - loch ness,யுனைடெட் கிங்டம்
04-அக்-202220:04:58 IST Report Abuse
RADE கழக கண்மணிகளுக்கு நாளைக்கு இயற்கை உபாதை வரவில்லையென்றாலும் கூட அது ரத்தத்தின் ரத்தங்கள் செய்த சதி என்று புகார் செய்வார்கள் போல்.
Rate this:
Cancel
baala - coimbatore,இந்தியா
30-செப்-202211:25:19 IST Report Abuse
baala இங்கு கருத்து எழுதுபவர்களின் எத்தனை பேர் அரசு கொடுத்த இலவசங்களை வாங்காமல் திருப்பி கொடுத்தவர்கள் இருக்கிறார்கள்
Rate this:
Cancel
30-செப்-202208:44:06 IST Report Abuse
Elamathivanan Era சபஷ் சரியான சாட்டையடி
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X