நாப்கின் கேட்ட சிறுமியை கேவலப்படுத்திய பெண் ஐஏஎஸ் அதிகாரி

Updated : செப் 30, 2022 | Added : செப் 29, 2022 | கருத்துகள் (53) | |
Advertisement
பாட்னா: பீஹாரில், ‛குறைந்த விலைக்கு சானிட்டரி நாப்கின் வழங்குவீர்களா?' என்று கேட்ட பள்ளி மாணவிகளிடம், ‛இப்போ நாப்கின் கேட்பீர்கள்; கடைசியில் காண்டம் (ஆணுறை) கூட எதிர்பார்ப்பீர்கள்' என பெண் ஐஏஎஸ் அதிகாரி அநாகரிக முறையில் பேசியது சர்ச்சையாகியுள்ளது. இந்த அதிகாரிக்கு பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.பீஹார் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு நிறுவனத்தின்
IAS officer, Rebukes, Girl, Seeking Pads, Napkins, Condoms, ஐஏஎஸ், பெண் அதிகாரி, மாணவி, நாப்கின், காண்டம், பீஹார்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

பாட்னா: பீஹாரில், ‛குறைந்த விலைக்கு சானிட்டரி நாப்கின் வழங்குவீர்களா?' என்று கேட்ட பள்ளி மாணவிகளிடம், ‛இப்போ நாப்கின் கேட்பீர்கள்; கடைசியில் காண்டம் (ஆணுறை) கூட எதிர்பார்ப்பீர்கள்' என பெண் ஐஏஎஸ் அதிகாரி அநாகரிக முறையில் பேசியது சர்ச்சையாகியுள்ளது. இந்த அதிகாரிக்கு பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.



பீஹார் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு நிறுவனத்தின் இயக்குநராக இருப்பவர், ஐ.ஏ.எஸ். அதிகாரி ஹர்ஜோத் கவுர். இவர் பாட்னாவில் நடைபெற்ற ‛அதிகாரம் பெற்ற மகள்கள், வளமான பீகார்' என்ற கருத்தரங்கில் பங்கேற்றார். இதில், 9, 10ம் வகுப்பு படிக்கும் மாணவிகளுடன், பெண் ஐஏஎஸ் அதிகாரி ஹர்ஜோத் கலந்துரையாடினார்.



அப்போது மாணவிகள் சிலர், ஹர்ஜோத் கவுரிடம் சந்தேகங்களை கேட்டனர். அதில் ஒரு மாணவி, ‛அரசு நிறைய இலவசங்களை வழங்குகிறது. எங்களுக்கு ரூ.20 முதல் 30 வரையிலான சானிட்டரி நாப்கின்களை அரசால் வழங்க முடியாதா?' எனக் கேள்வி எழுப்பினார்.



latest tamil news


இதற்கு பதிலளித்த ஹர்ஜோத், ‛இன்று நாப்கின் கேட்பீர்கள், நாளைக்கே ஜீன்ஸ் பேன்ட் கொடுங்கள் என்பீர்கள். பிறகு ஷூக்கள் வேண்டும் என்பீர்கள், முடிவில் குடும்ப கட்டுப்பாடு என்று வரும்போது, உங்களுக்கு இலவச காண்டம்களை அரசே தர வேண்டும் என கூறுவீர்கள்.



ஏன் அரசிடம் இருந்து பொருட்களை எடுத்து கொள்ள வேண்டிய அவசியம் உங்களுக்கு உள்ளது? இந்த எண்ணம் தவறானது' என மாணவிகளிடம் அருவருக்கத்தக்க வகையில் பதிலளித்தார். ஆனாலும் அதே மாணவி தொடர்ந்து, ‛அரசை தேர்ந்தெடுக்க ஓட்டளிப்பது இந்த மக்கள்தானே, தேர்தலின்போது எண்ணற்ற வாக்குறுதிகளை அரசு அளித்து வருவதாக' கூறி பதிலடி கொடுத்தார்.



latest tamil news


இதனால் ஆத்திரமடைந்த ஹர்ஜோத் கவுர், ‛அப்படியெல்லாம் நினைத்துக் கொண்டிருந்தால், நீங்கள் ஓட்டளிக்கவே வேண்டாம். பாகிஸ்தானை போலவே மாறிவிடுங்கள்' என மிகவும் அலட்சியமாக பேசினார்.



இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன. பலரும் பெண் ஐஏஎஸ் அதிகாரி ஹர்ஜோத் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மாணவிகளிடம் இது போன்று அநாகரிகமாக பேசி கேவலப்படுத்தியுள்ளதாக கருத்து தெரிவித்துள்ளனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (53)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
K.n. Dhasarathan - chennai,இந்தியா
01-அக்-202223:01:02 IST Report Abuse
K.n. Dhasarathan இது போன்ற அதிகாரிகளை உடனே சஸ்பெண்ட் செய்யவேண்டும், பொறுப்பிலே இருக்கும்போது பேச்சிலே கவனம் இல்லையெனில் தகுந்த தண்டனை அதுவும் உடனே தரணும்.
Rate this:
Cancel
Mind free napkins - Coimbatore ,இந்தியா
30-செப்-202218:05:01 IST Report Abuse
Mind free napkins Mind free napkins in ₹25,35,50,
Rate this:
Cancel
பிரபு - மதுரை,இந்தியா
30-செப்-202203:17:40 IST Report Abuse
பிரபு சில ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் இப்படித்தான் அரை வேக்காடாய் இருக்கிறார்கள். எப்படி படித்தார்கள் என்று தெரியவில்லை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X