மதுரை: மனித கழிவை அள்ளுவதற்கு மனிதர்களை பயன்படுத்தினால் கலெக்டர்கள் பணியிடை நீக்கம் செய்யப்படுவர் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை எச்சரித்துள்ளது.
திருநெல்வேலி பாளையங்கோட்டையைச் சே ர்ந்த அய்யா என்பவர் மனித கழிவுகளை இயந்திரங்களை கொண்டு சுத்தம் செய்வதற்கு உத்தரவிடக் கோரி, உயர்நீதிமன்றத்தில் பொது நல மனுத்தாக்கல் தொடர்ந்தார்.
இந்த வழக்கை இன்று விசாரித்த உயர்நீதிமன்ற மதுரைக்கிளை பிறப்பித்துள்ள உத்தரவு: மனிதக் கழிவுகளை மனிதனே அள்ளுவதை தடுக்காத மாவட்ட கலெக்டருக்களை பணியிடை நீக்கம் செய்ய நேரிடும். மனித கழிவுகளை மனிதனே அள்ளுவதை ஒருபோதும் நீதிமன்றம் அனுமதிக்காது.
தூய்மை பணியாளர்களுக்கு எப்போது விடிவுகாலம் பிறக்கும் என்று தெரியவில்லை என உயர்நீதிமன்ற மதுரை நீதிபதிகள் மகா தேவன், சத்திய நாரயண பிரசாத் அமர்வு வேதனை தெரிவித்தனர்.