மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் கடலங்குடி வழியாக ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக மயிலாடுதுறை மாவட்டம் குற்ற புலனாய்வு போலீசார்க்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, குற்றப்புலனாய்வு போலீசார் நள்ளிரவில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது சந்தேகத்திற்கிடமாக சரக்கு ஏற்றும் பகுதி முழுவதும் தார்பாயால் மூடப்பட்ட லாரியை மடக்கி சோதனை செய்ததில் லாரியில் ரேசன் அரிசி இருப்பது தெரியவந்தது.
விசாரனையில் கடலங்குடி பகுதியில் ரேசன் அரிசி வாங்கி லாரி மூலமாக கேரளா கடத்தி செல்வது தெரியவந்தது. கேரளாவிற்கு கடத்தி செல்லப்பட்ட 10 டன் ரேசன் அரிசி மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய லாரியையும் பறிமுதல் செய்து ஓட்டுநர் மணிகண்டன் (52) கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.