புளோரிடாவில் 'ஐயான்' புயல் கரையை கடந்தது!

Added : செப் 29, 2022 | |
Advertisement
புளோரிடா: அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் கேயோ கோஸ்டா என்ற கடற்கரை பகுதியருகே ஐயான் சூறாவளி புயல் இன்று கரையை கடந்தது. கரையை கடந்தபோது மணிக்கு 241 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசி உள்ளது. பாதிப்புகள்:சுமார் 18 லட்சம் மக்கள் மின்சாரமின்றி தவிக்கின்றனர். இந்தப் புயல் கியூபாவிலும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. அங்கு 2 பேர் இதனால் உயிரிழந்துள்ளனர். சுமார் 1
புளோரிடா, மாகாணம்,  ஐயான், சூறாவளி, புயல்

புளோரிடா: அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் கேயோ கோஸ்டா என்ற கடற்கரை பகுதியருகே ஐயான் சூறாவளி புயல் இன்று கரையை கடந்தது. கரையை கடந்தபோது மணிக்கு 241 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசி உள்ளது.


பாதிப்புகள்:


சுமார் 18 லட்சம் மக்கள் மின்சாரமின்றி தவிக்கின்றனர். இந்தப் புயல் கியூபாவிலும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. அங்கு 2 பேர் இதனால் உயிரிழந்துள்ளனர். சுமார் 1 கோடியே 10 லட்சம் மக்கள் மின்சாரம் துண்டிப்பால் அவதிப்படுகின்றனர்.



இது குறித்து, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறுகையில், புளோரிடாவே வெள்ளக்காடாக மாறியுள்ளது. அதனால் மருத்துவக் குழு மற்றும் 300 ஆம்பூலன்ஸ்களை அமெரிக்க அரசு அனுப்பியுள்ளது. மக்களுக்கு உணவு மற்றும் குடிநீர் வழங்கவும் ஏற்பாடுகள் தயார் நிலையில் இருக்கிறது. புளோரிடா மக்களுக்கு துணையாக அரசு இருக்கும் என்றார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X