புவனேஸ்வர்: 2019க்குப் பிறகு பல மாநிலங்களில் பா.ஜ., ஆட்சி அமைத்துள்ளோம். பா.ஜ., கட்சி தொண்டர்கள் நிறைந்துள்ள, வலுவான கட்சி என பா.ஜ., தேசிய தலைவர் நட்டா கூறினார்.
பிரமாண்ட வரவேற்பு:

பாஜ., தேசிய தலைவர் நட்டா இரண்டு நாள் பயணமாக ஒடிசா தலைநகர் புவனேஸ்வர் சென்றார். மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், பாஜ., மாநில தலைவர் சமீர், புவனேஸ்வர் எம்பி அபராஜிதா சாரங்கி மற்றும் மூத்த தலைவர்கள் விமானநிலையத்தில் நட்டாவை வரவேற்றனர். இதையடுத்து, பாஜ., தேசிய தலைவர் நட்டா ஜனதா மைதானத்தில் தொண்டர்களுடன் கலந்துரையாடினார்.

அப்போது, அவர் பேசியதாவது
2019க்குப் பிறகு பல மாநிலங்களில் ஆட்சி அமைத்தோம். பா.ஜ., தொண்டர்கள் நிறைந்துள்ள, வலுவான கட்சியாகும். ஜம்மு காஷ்மீர் முதல் மே.வங்க வரை, வாரிசு அரசியலுக்கு எதிராகவும் , குடும்ப கட்சிகளுக்கு எதிராகவும் போராடுகிறோம். ஒடிசாவில் கூட ஒரு நபர் கட்சி உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.
நாளை, பாஜ., தலைவர் ஒடிசாவில் உள்ள ஜெகநாதர் கோயிலுக்குச் சென்று பிரார்த்தனை செய்ய உள்ளார்.
