இந்தியாவை ஒருங்கிணைப்பது தேசிய விளையாட்டுகள் தான்: பிரதமர்

Updated : செப் 29, 2022 | Added : செப் 29, 2022 | கருத்துகள் (8) | |
Advertisement
ஆமதாபாத்: இந்தியாவை ஒருங்கிணைப்பது தேசிய விளையாட்டுகள் தான் என குஜராத்தில் 36-வது தேசிய விளையாட்டு போட்டியினை பிரதமர் மோடி இன்று துவக்கி வைத்து பேசினார். 36-வது தேசிய விளையாட்டு போட்டிகள் குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் இன்று (செப்.29) துவங்கி அக்டோர் 12 -ம் தேதி வரை நடக்கிறது. இதையடுத்து இரு நாள் பயணமாக குஜராத் வந்துள்ள பிரதமர் மோடி, ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி
பிரதமர், மோடி, குஜராத், National Games , தேசிய  விளையாட்டு, Modi , Ahmedabad

ஆமதாபாத்: இந்தியாவை ஒருங்கிணைப்பது தேசிய விளையாட்டுகள் தான் என குஜராத்தில் 36-வது தேசிய விளையாட்டு போட்டியினை பிரதமர் மோடி இன்று துவக்கி வைத்து பேசினார்.

36-வது தேசிய விளையாட்டு போட்டிகள் குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் இன்று (செப்.29) துவங்கி அக்டோர் 12 -ம் தேதி வரை நடக்கிறது.


latest tamil news



இதையடுத்து இரு நாள் பயணமாக குஜராத் வந்துள்ள பிரதமர் மோடி, ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் 36-வது தேசிய விளையாட்டு போட்டி துவக்க விழாவில் பங்கேற்றார். இதில் குஜராத் முதல்வர் பூபேந்திரா பட்டேல் , மத்திய விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அமைச்சர் உள்ளிட்ட மாநில அமைச்சர்கள் , அரசு அதிகாரிகள் பங்கேற்றனர்.



விழாவை துவக்கிவைத்து மோடி பேசியது, இந்தியாவை ஒருங்கிணைப்பது தேசிய விளையாட்டு தான். இன்று துவங்கியுள்ள தேசிய விளையாட்டு போட்டியில் பங்கேற்கஉள்ள அனைத்து தடகள வீரர்களுக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
8 ஆண்டுகளுக்கு முன்பு, நம் விளையாட்டு வீரர்களில் 100-க்கும் குறைவான தடகள வீரர்களே சர்வதேச போட்டிகளில் பங்கேற்று சாதனை படைத்தனர். ஆனால் இப்போது, நமது வீரர்ரகள் 300 க்கும் மேற்பட்டோர் சர்வதேச போட்டிகளில் பங்கேற்கின்றனர்.இவ்வாறு பேசினார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mohan - Thanjavur ,இந்தியா
29-செப்-202222:33:41 IST Report Abuse
Mohan அதெல்லாம் சரிதான் ஜி.என்னஒன்னு, விளையாட்டு முடிந்ததும் ஆட்டம் காலின்னு கிளம்பிடுவாங்க. அதுக்கு பதிலாக நதிகளை இணைத்து தேசிய நீரோட்டமா விட்டுப் பாருங்க. இந்தியாவே சொர்க்கமாயிடும். இத ஒங்கள விட்டா ஒரு பயலும் செய்ய மாட்டானுக.
Rate this:
Cancel
பைரவர் சம்பத் குமார் 1).இந்தியாவை இணைத்து வைப்பதில் ஒன்றுதான் விளையாட்டு போட்டி. அதில் ஐயமின்றி ஒத்துக்கொள்ள வேண்டும்.2).அதேப்போல் பாரத தாயின் அன்பு மற்றும் அரவணைக்கும் பாசம் இந்தியர்களை முதன்மையானாதாக மனதில் நிறுத்தி உள்ளது.3). தற்கால இந்தியாவை அரவணைத்து ஒன்றுபட்ட வலிமையான தேசமாக BJP மற்றும் அதன் தலைவர்கள் தொண்டர்கள் மற்றும் BJP சார்ந்த அமைப்புகளின் தலையான பங்கு முதன்மையானது. 4). குறிப்பாக திரு மோடி அவர்களின் அளவிட முடியாத பங்களிப்பு போற்றதக்கது. வணங்கதக்கது.நன்றி வணக்கம் ஐயா
Rate this:
Cancel
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
29-செப்-202221:13:29 IST Report Abuse
Ramesh Sargam இந்தியாவை ஒன்றிணைப்பது தேசிய விளையாட்டுகள்தான் - பிரதமர் மோடி. இல்லவே இல்லை, எங்கள் ராகுல் காந்தியின் பாத யாத்திரைதான், என்று நான் சொல்லவில்லை. காங்கிரஸ் கட்சியினர் சொல்கிறார்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X