லாரிகளை மாற்றுப் பாதையில் இயக்க வலியுறுத்தல்

Added : செப் 29, 2022 | |
Advertisement
பொன்னேரி:பொன்னேரி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், பாதாள சாக்கடை திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக பிரதான சாலைகளில் பள்ளங்கள் தோண்டி, சிமென்ட் உருளைகள் பதிக்கும் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.ஆலாடு சாலையில் ஐந்து மாதங்களாக பணிகள் நடைபெற்று வருவதால், அந்த வழித்தடத்தில் போக்குவரத்து முற்றிலும் தடைபட்டு வாகன ஓட்டிகள் மாற்று பாதைகளில் சுற்றிக் கொண்டு
லாரிகளை மாற்றுப் பாதையில் இயக்க வலியுறுத்தல்

பொன்னேரி:பொன்னேரி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், பாதாள சாக்கடை திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக பிரதான சாலைகளில் பள்ளங்கள் தோண்டி, சிமென்ட் உருளைகள் பதிக்கும் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.


ஆலாடு சாலையில் ஐந்து மாதங்களாக பணிகள் நடைபெற்று வருவதால், அந்த வழித்தடத்தில் போக்குவரத்து முற்றிலும் தடைபட்டு வாகன ஓட்டிகள் மாற்று பாதைகளில் சுற்றிக் கொண்டு சென்று வருகின்றனர்.பொன்னேரி தாலுகா அலுவலக சாலையில் தற்போது பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த சாலையில், வட்டாட்சியர், கோட்டாட்சியர், நான்கு நீதிமன்றங்கள், சார் - பதிவாளர் அலுவலகம், கிளை சிறை உள்ளிட்ட அரசு அலுவலகங்கள் உள்ளன.


இவற்றிற்கு வரும் வாகனங்கள் தற்போது பொன்னேரி - திருவொற்றியூர் நெடுஞ்சாலை ஓரங்களில் நிறுத்தி வைக்கப்படுகின்றன.இந்நிலையில், இரண்டு தினங்களாக பொன்னேரி - திருவொற்றியூர் நெடுஞ்சாலையிலும் பாதாள சாக்கடை திட்டப் பணிகளுக்காக பள்ளங்கள் தோண்டப்பட்டு வருகின்றன.அரசு அலுவலகங்களுக்கு வருபவர்களின் கார்கள், இருசக்கர வாகனங்கள், சாலையோர கடைகள், உணவகம் மற்றும் வங்கிகளுக்கு வரும் வாகனங்கள் என, சாலையில் ஏராளமான வாகனங்கள் நிறுத்தி வைக்கப்படுகின்றன.


சாலையின் ஒரு பகுதியில் பாதாள சாக்கடை திட்டப் பணிகள் நடைபெறும் நிலையில், மற்றொரு பகுதியில் உள்ள குறுகிய பாதையில் வாகனங்கள் சிரமத்துடன் சென்று வருகின்றன.இந்த சாலையில் நிலக்கரி, ஆயில் லாரி மற்றும் கன்டெய்னர் லாரிகள் என, அதிகப்படியான கனரக வாகனங்கள் செல்வதால், பணிகள் நடைபெறும் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.


திருவொற்றியூர் நெடுஞ்சாலை, செங்குன்றம் சாலை என, அடுத்தடுத்து பணிகள் நடைபெற உள்ளதால், வாகன நெரிசல் பல மாதங்களுக்கு தொடர வாய்ப்பு உள்ளது.பொதுமக்கள் சிரமம் இன்றி பயணிக்க, பாதாள சாக்கடை திட்டப் பணிகள் முடியும் வரை, கனரக வாகனங்களை மாற்று வழித் தடத்தில் இயக்க காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X