திருச்சி:திருச்சி, அரியமங்கலத்தில் உள்ள ஜெய் அகோரகாளி கோவிலில், நேற்று முன்தினம் நள்ளிரவு, அகோரிகள் நவராத்திரி சிறப்பு பூஜை நடத்தினர்.
திருச்சி, அரியமங்கலத்தில் உள்ள ஜெய் அகோரகாளி கோவிலை, காசியில் பயிற்சி பெற்ற அகோரி மணிகண்டன் பூஜைகள் செய்து நிர்வகிக்கிறார்.அந்த கோவிலில், நவராத்திரி விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, ஜெய் அகோரகாளி இருதினங்களுக்கு முன் வாராகி அம்மன் அலங்காரத்தில் அருள்பாலித்தார்.
நள்ளிரவில் அகோரிகள் மகா யாகம் நடத்தி, ஜெய் அஷ்டகால பைரவர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு பூஜைகள் செய்தனர்.யாக பூஜையின் போது, அகோரிகள் மேளம் அடித்தும், சங்குகள் முழங்கியும் சிவவாக்கியம் ஓதினர். அதில் கலந்து கொண்ட பக்தர்கள், அகோரிகளிடம் ஆசி பெற்றனர்.