நாகப்பட்டினம்:உயிருக்கு பாதுகாப்பு கோரி நாகை, எஸ்.பி., அலுவலகத்தில், காதல் திருமண ஜோடி மனு அளித்தனர்.
நாகை மாவட்டம் வேதாரண்யத்தை சேர்ந்தவர் சுமித்ரா, 22; கணவர் பரமேஸ்வரன், 24, மற்றும் உறவினர்களுடன், நேற்று நாகை, எஸ்.பி., அலுவலகத்தில் அளித்த மனு:பள்ளி பருவத்தில் இருந்து பரமேஸ்வரனை காதலித்து வந்தேன். காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்து, வேறொரு இடத்தில் திருமணம் செய்து கொடுக்க நடவடிக்கை எடுத்தனர்.
இதனால் வீட்டை விட்டு வெளியேறி, கடந்த 22ம் தேதி, முத்துப்பேட்டையில் உள்ள கோவிலில் நானும், பரமேஸ்வரனும் திருமணம் செய்து கொண்டோம்.இதனால் எங்களை கவுரவக் கொலை செய்ய என் குடும்பத்தினர் தேடி வருகின்றனர். எங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.