இதே நாளில் அன்று

Added : செப் 29, 2022 | |
Advertisement
-செப்டம்பர் 30, 1881 சிவகங்கை மாவட்டம், கானாடு காத்தானில், 1881ல் இதே நாளில், முத்தையா செட்டியார் -- மீனாட்சி தம்பதிக்கு மகனாக பிறந்தவர் அண்ணாமலை செட்டியார். இவரின் தந்தை ஒரு வங்கியாளர்.தன் குடும்ப தொழிலான வணிகத்தை, சிறு வயதிலேயே தந்தையிடம் இருந்து கற்றார். தன், 15வது வயதில் சீதை ஆச்சியை மணந்தார். 20வது வயதில் தந்தையை இழந்தார். பின், பாகப் பிரிவினையில் கிடைத்த சில லட்சம்
இதே நாளில் அன்று


-செப்டம்பர் 30, 1881



சிவகங்கை மாவட்டம், கானாடு காத்தானில், 1881ல் இதே நாளில், முத்தையா செட்டியார் -- மீனாட்சி தம்பதிக்கு மகனாக பிறந்தவர் அண்ணாமலை செட்டியார். இவரின் தந்தை ஒரு வங்கியாளர்.தன் குடும்ப தொழிலான வணிகத்தை, சிறு வயதிலேயே தந்தையிடம் இருந்து கற்றார். தன், 15வது வயதில் சீதை ஆச்சியை மணந்தார். 20வது வயதில் தந்தையை இழந்தார். பின், பாகப் பிரிவினையில் கிடைத்த சில லட்சம் ரூபாயை முதலீடாக்கி, தொழில்களை துவங்கினார். சில ஆண்டுகளிலேயே லாபத்தை கோடிகளில் குவித்தார். கடந்த, ௧௯௧௦ல் ஐரோப்பாவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்ட இவர், ஆக்ஸ்போர்டு மற்றும் கேம்பிரிட்ஜ் பல்கலைகளை பார்வையிட்டார். நாடு திரும்பிய பின், ௧௯௨௯ல், சிதம்பரத்தில் அனைத்து வசதிகளுடன் அண்ணாமலை பல்கலையை உருவாக்கினார். கோவில் திருப்பணிகள் பல செய்தார். கிழக்காசிய நாடுகளிலும் தொழிலை விரிவுபடுத்தினார். இவரின் சகோதரர் ராமசாமி செட்டியாருடன் சேர்ந்து, இந்தியன் வங்கியை துவக்கினார். இவர், சென்னை மாகாண எம்.எல்.ஏ.,வாகவும், பார்லிமென்ட் மேலவை உறுப்பினராகவும் பதவி வகித்தார். இவரின் சேவைகளுக்காக, 'சர்' பட்டம் பெற்றார். இசை மீது பேரார்வம் கொண்ட இவர், தமிழிசைக்கு மாபெரும் தொண்டாற்றினார். செட்டி நாட்டரசரான இவர், 1948 ஜூன் 15ல், தன், 6௭வது வயதில் காலமானார். 'ராஜா அண்ணாமலைபுரம்' என்ற பகுதியால், சென்னைவாசிகளின் நாவில் வாழும் தொழிலதிபர் பிறந்த தினம் இன்று!

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X