மயிலாடுதுறையில் ரூ 1 கோடி மதிப்பிலான கோவில் நிலம் மீட்பு: வக்கில்கள் தடுத்ததால் பரபரப்பு

Updated : செப் 29, 2022 | Added : செப் 29, 2022 | கருத்துகள் (10) | |
Advertisement
மயிலாடுதுறை பரிமள ரெங்கநாதர் கோயிலுக்கு சொந்தமான 6876 சதுர அடி பரப்பளவு உள்ள நிலம் ரூபின் சார்லஸ் என்பவருக்கு புஞ்சை குத்தகைக்கு விடப்பட்டிருந்தது. அந்த நிலத்தை வணிக பயன்பாட்டிற்கு மாற்றி கட்டிடம் கட்டி மோட்டார் தொழில் கூடம் அமைத்து ஆக்கிரமிப்பு செய்வது தெரிய வந்தது இதனை அடுத்து ரூபின் சார்லஸ் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பதற்கு இந்து சமய அறநிலையத்துறை
மயிலாடுதுறையில்  ரூ 1 கோடி மதிப்பிலான கோவில் நிலம் மீட்பு: வக்கில்கள் தடுத்ததால் பரபரப்பு

மயிலாடுதுறை பரிமள ரெங்கநாதர் கோயிலுக்கு சொந்தமான 6876 சதுர அடி பரப்பளவு உள்ள நிலம் ரூபின் சார்லஸ் என்பவருக்கு புஞ்சை குத்தகைக்கு விடப்பட்டிருந்தது.

அந்த நிலத்தை வணிக பயன்பாட்டிற்கு மாற்றி கட்டிடம் கட்டி மோட்டார் தொழில் கூடம் அமைத்து ஆக்கிரமிப்பு செய்வது தெரிய வந்தது இதனை அடுத்து ரூபின் சார்லஸ் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பதற்கு இந்து சமய அறநிலையத்துறை மயிலாடுதுறை இணை ஆணையர் நீதிமன்றத்தில் சட்டப்பிரிவு 78 ன் கீழ் பல வகை மனு எண் 97/ 2016 வெளியேற்று வழக்கினை கோவில் நிர்வாகம் சார்பில் தொடங்கப்பட்டது வழக்கின் முடிவில் 2019 பிப்ரவரி 25ஆம் தேதி இணையான நீதிமன்றத்தின் உத்தரவின் படி ரூபின் சார்லஸ் என்பவரை கோவில் நடத்தி இருந்து வெளியேற்றுவதற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.


இதையடுத்து ரூபின் சார்லஸ் கோவில் இடத்திலிருந்து வெளியிடுவதற்கு 15 நாட்களுக்கு முன்னதாக முறையான அறிவிப்பு கொடுக்கப்பட்டது ஆனால் அவர்கள் இடத்தை விட்டு வெளியேறாததை அடுத்து மயிலாடுதுறை இந்து சமய அறநிலைத்துறை இணை ஆணையர் மோகனசுந்தரம் உத்தரவின் படி உதவி ஆணையர் முத்துராமன் தலைமையிலான அறநிலையத்துறை அதிகாரிகள் ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்க முற்பட்டபோது ரூபின் சார்லஸ் மனைவி பிரேமலதா தடுத்து தர்ணாவில் ஈடுபட்டார்.


தொடர்ந்து ஆதரவு வக்கீல்கள் இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகளை தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து போலீசார் பாதுகாப்புடன்ஆக்கிரமிக்கப்பட்ட கோவில் நிலத்தை மீட்டு சுவாதீனம் எடுத்து காம்பவுண்ட் கேட்டுக்கு சீல் வைக்கப்பட்டது. மீட்கப்பட்ட நிலத்தில் மதிப்பு ஒரு கோடி ரூபாய் ஆகும்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
30-செப்-202215:46:12 IST Report Abuse
மு.கு. பாலசுப்ரமணியன் இந்துவோ கிறிஸ்துவோ பிரச்சினை இல்லை கோவிலுக்கு சொந்தமான நிலங்கள் உடனடியாக மீட்கபடவேண்டும் வாழ்க இந்தியா வாழ்க இந்துமதம் மு.கு. பாலசுப்ரமணியன் தமிழ்நாடு நுகர்வோர் உரிமைகள் பாதுகாப்பு அறக்கட்டளை திருமானூர் கீழப்பழூர் அரியலூர் மாவட்டம்
Rate this:
Cancel
Govindarajan - Cuddalore ,இந்தியா
30-செப்-202214:43:52 IST Report Abuse
Govindarajan இவ்வளவு நாட்கள் அந்த தனிப்பட்ட நபரிடம் தானே இருந்தது ? அவன் எந்த மதத்தவனாக இருந்தாலென்ன ? மீட்டது தற்போதுள்ள அதிகாரிகள் தானே ? ஆள்கின்ற கட்சியினரைக் குறை சொல்லாதீர்கள். அதிகாரிகள் சரியாக இருந்தால், அரசியல்வாதிகளால் ஒன்றும் செய்ய முடியாது. நம்மைப் போன்றவர்கள், அதிகாரிகளைத் தான் தட்டி கேட்க வேண்டும்.
Rate this:
Cancel
Dharmavaan - Chennai,இந்தியா
30-செப்-202207:59:59 IST Report Abuse
Dharmavaan ஹிந்து கோயில் நிலம் எப்படி கிருஸ்துவனுக்கு விடப்பட்டது. கேட்பாரில்லை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X