முகேஷ் அம்பானிக்கு 'இசட் பிளஸ்' பாதுகாப்பு வழங்க முடிவு

Updated : செப் 29, 2022 | Added : செப் 29, 2022 | கருத்துகள் (9) | |
Advertisement
மும்பை: ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானி உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் அவருக்கு 'இசட்' பிளஸ் பாதுகாப்பு வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானி, இவருக்கு கடந்த சில ஆண்டுகளாக ‛இசட்' பிரிவு பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது. இது போன்ற இசட் பாதுகாப்பு இந்தியாவில் மிக முக்கிய தலைவர்கள், பாதுகாப்பு
 
முகேஷ் அம்பானி, இசட் பிளஸ், Mukesh Ambani , Z plus,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

மும்பை: ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானி உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் அவருக்கு 'இசட்' பிளஸ் பாதுகாப்பு வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானி, இவருக்கு கடந்த சில ஆண்டுகளாக ‛இசட்' பிரிவு பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது. இது போன்ற இசட் பாதுகாப்பு இந்தியாவில் மிக முக்கிய தலைவர்கள், பாதுகாப்பு அச்சுறுத்தல் மிக்க தலைவர்கள், முக்கிய பிரபலங்கள் போன்றவர்களுக்கு 'இசட்' பிரிவு பாதுகாப்பு அளிக்கப்படுகிறது.


latest tamil news




இந்நிலையில்முகேஷ் அம்பானியின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக ஐ.பி. எனப்படும் மத்திய புலனாய்வு அமைப்பு உள்துறை அமைச்சகத்திற்கு சமீபத்தில் அறிக்கை அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து முகேஷ் அம்பானியின் பாதுகாப்பை அதிகரிக்க ' இசட் பிளஸ் ' பாதுகாப்பு வழங்கிட மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து 'இசட் பிளஸ் ' பாதுகாப்பு படைப்பிரிவில் 10 தேசிய பாதுகாப்பு கமாண்டோக்கள் உள்ளிட்ட 55 பாதுகாப்பு படை வீரர்கள் பாதுகாப்பு அளிப்பார்கள்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Lion Drsekar - Chennai ,இந்தியா
30-செப்-202210:34:26 IST Report Abuse
Lion Drsekar நாளுக்கு நாள் கட்சிகளின் எண்ணிக்கை மிக அதிக அளவில் பெருகிக்கொண்டே போகிறது பெட்டிக்கடை முதல் கோடீஸ்வரர் வரை எத்தினை கட்சிகளுக்குதான் நிதி கொடுக்க முடியும். பெரிய தலைகள் குறிப்பாக தொழில் அதிபர்கள், கல்வியாளர்கள் இந்த கூட்டத்தில் இருந்து தப்பித்துக்கொள்ள அவர்களே தனி கட்சி ஆரம்பித்து விட்டார்கள் சிலர் கட்சிகளுடன் சேர்ந்து கொண்டு சொத்தை பாதுகாத்துக்கொண்டு வரும் நிலை, ஆகவே அரசுக்கும், ஆள்பவர்களுக்கும், ஏழைகளுக்கும், நாட்டு வளர்ச்சிக்கும் முதுகெலும்பே சுய வேலைவாய்ப்பு மட்டுமே , இவர்களுக்குத்தான் பாதுகாப்பு மிக மிக முக்கியம், அரசியல் கட்சிக்கு அவர்களே பாதுகாப்பு அதற்க்கு மேல் வேறு என்ன வேண்டும், வந்தே மாதரம்
Rate this:
Cancel
30-செப்-202208:39:55 IST Report Abuse
Elamathivanan Era நாட்டுக்காக என்னகிழிச்சார் தனக்குவேண்டும்அளவுக்கு சொத்துக்கள் சேர்த்தார் அதுக்குஅவருக்கு பாதுகாப்பு அவசியம்
Rate this:
Cancel
Matt P - nashville,tn ,யூ.எஸ்.ஏ
30-செப்-202205:52:16 IST Report Abuse
Matt P என்ன பாதுகாப்பு வேணாம் கொடுக்கலாம். மாசா மாசம் அவர் அந்த பாதுகாப்புக்கு பணம் கட்டினாl சரி.
Rate this:
Fastrack - Redmond,இந்தியா
30-செப்-202206:12:20 IST Report Abuse
Fastrackஅவர் கட்டும் வருமானவரி ..எத்தனை பேருக்கு வேலை தந்திருக்கிறார் ..இதெல்லாம் கருத்தில் எடுத்துக்கொண்டால் இப்படி கேட்க தோணாது...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X