போராட்டத்தால் ரூ.5 கோடி சேதம் பி.எப்.ஐ.,யிடம் வசூலிக்க உத்தரவு

Updated : செப் 30, 2022 | Added : செப் 30, 2022 | கருத்துகள் (19) | |
Advertisement
கொச்சி:கேரளாவில் திடீர் வேலை நிறுத்தப் போராட்டத்தால், மாநில போக்குவரத்துக் கழகத்துக்கு ஏற்பட்ட இழப்பீடு 5 கோடி ரூபாயை செலுத்தும்படி, தடை செய்யப்பட்டுள்ள பி.எப்.ஐ., எனப்படும் 'பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா' அமைப்புக்கு கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கேரளாவில், மார்க்சிஸ்ட் கம்யூ.,வைச் சேர்ந்த முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் இடது ஜனநாயக முன்னணி கூட்டணி
ரூ5கோடி, சேதம்,  பிஎப்ஐ, கேரளா, கோர்ட் ,உத்தரவு

கொச்சி:கேரளாவில் திடீர் வேலை நிறுத்தப் போராட்டத்தால், மாநில போக்குவரத்துக் கழகத்துக்கு ஏற்பட்ட இழப்பீடு 5 கோடி ரூபாயை செலுத்தும்படி, தடை செய்யப்பட்டுள்ள பி.எப்.ஐ., எனப்படும் 'பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா' அமைப்புக்கு கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கேரளாவில், மார்க்சிஸ்ட் கம்யூ.,வைச் சேர்ந்த முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் இடது ஜனநாயக முன்னணி கூட்டணி ஆட்சி நடக்கிறது.

நாடு முழுதும் உள்ள பி.எப்.ஐ., அமைப்பின் அலுவலகங்களில், கடந்த 22ம் தேதி தேசிய புலனாய்வு அமைப்பு அதிரடி சோதனை நடத்தி பலரை கைது செய்தது.இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பி.எப்.ஐ., சார்பில் கேரளாவில், 23ம் தேதி முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அப்போது பல இடங்களில் வன்முறை வெடித்தது.திடீர் போராட்டம் மற்றும் வன்முறையால், 5.06 கோடி ரூபாய் இழப்பீடு ஏற்பட்டுள்ளதாகவும், அதை போராட்டத்தில் ஈடுபட்ட பி.எப்.ஐ., அமைப்பிடம் இருந்து வசூலிக்க உத்தரவிடக் கோரியும், கேரள மாநில போக்குவரத்துக் கழகம் சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.


latest tamil news



இதை விசாரித்த உயர் நீதிமன்ற அமர்வு தன் உத்தரவில் கூறியுள்ளதாவது:தற்போது இந்த அமைப்பை மத்திய அரசு தடை செய்துள்ளது. திடீர் போராட்டம் மற்றும் வன்முறையால் போக்குவரத்துக் கழகத்துக்கு ஏற்பட்ட, 5.06 கோடி ரூபாய் இழப்பை செலுத்தும்படி இந்த அமைப்புக்கு உத்தரவிடப்படுகிறது.
இந்த இழப்பீட்டை செலுத்தும் வரையில், போராட்டம் மற்றும் வன்முறையின்போது கைது செய்யப்பட்ட இந்த அமைப்பைச் சேர்ந்த எவருக்கும் ஜாமின் வழங்கப்படாது. மேலும் இந்த அமைப்பின் முன்னாள் பொதுச் செயலர் அப்துல் சத்தார் இதற்கு பொறுப்பாக்கப்படுகிறார். இந்த அமைப்பின் மீதான அனைத்து வழக்குகளிலும் அவரே ஒரு வாதியாக இருப்பார்.
இவ்வாறு அமர்வு கூறியுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
பச்சையப்பன் கோபால் புரம் ஏய்யா! இதென்னெய்யா தீர்ப்பு? இவர்கள்தான் கலவரக்காரர்கள் என்பது இன்னும் நிரூபிக்கப் படதாதபோது இவர்களை பணம் கட்ட சொல்வது எந்த ஊர் நியாயம்? உத்திர பிரதேச நியாயமா?? ஏதேனும் சமூக விரோதிகள் செய்திருந்தால்? அவர்களை கண்டுபிடித்து அவர்களிடம் இருந்து வசூலிக்கப்பட வேண்டும்.
Rate this:
Cancel
Ram - ottawa,கனடா
30-செப்-202209:56:06 IST Report Abuse
Ram இவர்களை எனகொண்டெரில் போடவேண்டும் , இல்லையென்றால் இந்தியாவை ஆப்கனிஸ்தான் ஆகிவிடுவார்கள்
Rate this:
Cancel
duruvasar - indraprastham,இந்தியா
30-செப்-202209:27:32 IST Report Abuse
duruvasar வெறும் 5 கோடி தானா? நாளைக்கு காலையில் எம்மிரேட்ஸ் பிளைட்டில் 10 கிலோ ஸ்வப்னா பிஸ்கட் வரவழிச்சிடுவோம். போதுமா? மைனர் குஞ்சு மாதிரி அபராதத்தை அட்வான்ஸா கூட கட்ட தயார் நீதியயசயரே. இது உண்டியல் மாடல் ஆட்சி
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X