'தலைகீழாக கட்டி தொங்க விடுவேன்!' அரசு அதிகாரியை மிரட்டிய அமைச்சர்

Updated : செப் 30, 2022 | Added : செப் 30, 2022 | கருத்துகள் (9) | |
Advertisement
போபால் :மத்திய பிரதேசத்தில், உணவு பாதுகாப்புத் துறை அதிகாரியை, 'தலைகீழாக கட்டி தொங்க விடுவேன்' என, பா.ஜ., அமைச்சர் மொபைல் போனில் மிரட்டிய, 'ஆடியோ' வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.ம.பி.,யில், முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது.இங்கு, 'கடமையை செய்ய தவறும் அரசு அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என, மாநில முதல்வர் சமீபத்தில்
மபி, அரசு அதிகாரி, அமைச்சர் , மிரட்டல்


போபால் :மத்திய பிரதேசத்தில், உணவு பாதுகாப்புத் துறை அதிகாரியை, 'தலைகீழாக கட்டி தொங்க விடுவேன்' என, பா.ஜ., அமைச்சர் மொபைல் போனில் மிரட்டிய, 'ஆடியோ' வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.



ம.பி.,யில், முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது.இங்கு, 'கடமையை செய்ய தவறும் அரசு அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என, மாநில முதல்வர் சமீபத்தில் உத்தரவிட்டார். சமீபத்தில் அவர் ஒரு அரசு விழாவில் வைத்து சில அதிகாரிகளை, 'சஸ்பெண்ட்' செய்தார். இப்படி அதிரடி நடவடிக்கைகள் ஒருபுறம் இருக்க, முதல்வரின் உத்தரவுக்கு முரணான சம்பவம் ஒன்று அங்கு அரங்கேறி உள்ளது.


latest tamil news


மாநில அமைச்சரவையில், பா.ஜ.,வைச் சேர்ந்த ராம்கேலாவன் படேல் என்பவர் பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை இணை அமைச்சராக பதவி வகித்து வருகிறார். இவர் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரியுடன் பேசுவதாக கூறப்படும், 'ஆடியோ' சமீபத்தில் வெளியானது. அதில், 'என்னுடைய தொகுதியான அமர்பதானில் உள்ள கடைகளில் கலப்பட உணவு தொடர்பாக எவ்வித சோதனைகளும் நடத்தப்பட கூடாது. வியாபாரிகள் மீது வழக்கு பதிவு செய்ய கூடாது. மீறினால், உன்னை தலைகீழாக கட்டி தொங்க விடுவேன்' என அமைச்சர், அதிகாரியை மிரட்டும் ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.



இது தன் குரல் தானா, இல்லையா என்பது குறித்து அமைச்சர் ராம்கேலாவன் விளக்கம் அளிக்கவில்லை; மிரட்டப்பட்ட அதிகாரியும் இது குறித்து வாய் திறக்கவில்லை.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sampath Kumar - chennai,இந்தியா
30-செப்-202211:11:38 IST Report Abuse
Sampath Kumar நீக்க மிரட்டுங்க சார் பிஜேபி காரன் எது செய்தாலும் தப்பவே கிடையாது நாம யாரு இந்தவையே ஆளும் கட்சி அல்லவே அனால் நம்மை மீறி இவனது சவுண்ட் விட்டால் உடனே பாய்ந்து வந்து திராவிட விஷம் டிராவிட் மாடல், விடியல் ஆட்சியில் இப்படித்தான் நாடாகும் என்று உரட்டைமட்டும் தான்யங்க மாட்டோம் இல்லையா ??
Rate this:
Cancel
Ravichandran Narayanaswamy - chennai,இந்தியா
30-செப்-202208:40:34 IST Report Abuse
Ravichandran Narayanaswamy SDPI PFI பயங்கரவாத கட்சிகள் அல்ல என்று தான் தமிழகத்தில் ஆளும்கட்சியினர் அவர்களுக்கு ஆதரவு அளித்துவருகிறார்கள். அவர்களுக்காக வக்காலத்து வாங்கிக்கொண்டிருக்கிறார்கள். ஒருவேளை ஒலிம்பிக் போட்டிக்காக பெட்ரோல் பாம் எறிதல் பயிற்சி எடுத்துக்கொள்கிறார்களோ என்று மக்களுக்கு தோன்றுகிறது.. என்னவோ பேப்பர் போடுவதுபோல பெட்ரோல் குண்டை வீசுகிறார்கள். முதல்வர் அவர்களின் உற்சாகத்தை பாராட்டிக்கொண்டிருக்கிறாரா? ஒரு கண்டனமோ எதிர்ப்போ தெரிவிக்கவில்லையே. தமிழ்நாடு கூடிய சீக்கிரம் பாகிஸ்தானாக மாறும் போலிருக்கே. முதல்வர் இதைப்பற்றிய வெள்ளை அறிக்கையை தரவில்லை. யாரெல்லாம் அந்த மர்ம மனிதர்கள்? அவர்களின் பெயர்களை வெளியிடலாமே. ஒருவேளை ஸ்விக்கி சோமேட்டோ மூலம் பயங்கரவாதம் செய்யப்படுகிறதா? ஏன் ஒருத்தரையும் மீடியாக்களில் காட்டவில்லை. இதிலும் ஊழலா.
Rate this:
Cancel
Ravichandran Narayanaswamy - chennai,இந்தியா
30-செப்-202208:31:02 IST Report Abuse
Ravichandran Narayanaswamy முன்னேயெல்லாம் 'ஆட்கள் வேலைசெய்கிறார்கள்' என்ற பலகை சாலைகளில் இருக்கும். இப்போதெல்லாம் அதற்குப்பதில் 'ரௌடிகள் ஆட்சி செய்கிறார்கள். உஷாரா இருக்கவும்'னு பலகை தான் சாலைகளில் வைக்கவேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X