கோவை:'அரசாணையை திருத்தாவிட்டால், விவசாய நிலங்கள் பாலைவனமாகும்; 5 லட்சம் பேர் பாதிக்கப்படுவர்' என, விவசாயிகள் எச்சரித்துள்ளனர்.கோவை - திருப்பூர் விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தைச் சேர்ந்த பிரதிநிதிகள், மாவட்ட வருவாய் அலுவலர் லீலா அலெக்ஸை நேரில் சந்தித்து, மனு கொடுத்தனர். விவசாயிகள் சந்திக்கும் பிரச்னைகளை பட்டியலிட்டு, தீர்வு காண வலியுறுத்தினர்.அதில் கூறியிருப்பதாவது: அனைத்து அணை மதகுகள், கால்வாய் மதகுகள், பழுதடைந்த கால்வாய்களை விரைந்து சீரமைக்க வேண்டும். ஆனைமலை - நல்லாறு திட்ட பணிகளை துவக்க வேண்டும்.தொழிற்சாலைகளாகவும், காற்றாலைகளாகவும் மாறியுள்ள பி.ஏ.பி., பாசன நிலங்களை, பாசன திட்டத்தில் இருந்து நீக்கி, மூன்று மண்டலங்களாக மாற்ற வேண்டும். அரசு அதிகாரிகள், விவசாய பிரதி நிதிகள் அடங்கிய குழு அமைத்து, 1965ல் பிறப்பித்த அரசாணையை தற்போதைய சூழலுக்கேற்ப கருத்துரு உருவாக்கி, விவசாயத்துக்கு ஏற்ற வகையில் பயன்களை ஏற்படுத்தி, புதிய அரசாணை வெளியிட வேண்டும். அரசாணையை திருத்தாவிட்டால், 5 லட்சம் பேர் பாதிக்கப்படுவர்; விவசாய நிலங்கள் பாலைவனமாகும். இவ்வாறு, விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.